Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/11/2011

ஜனாதிபதியும், சாக்கடை பன்றியும்!!!

ழ்மையான குடும்பத்தில் அவன் பிறந்தான். சிறுவனாக இருந்தபோது தந்தையின் பணிகளுக்கு  உதவிபுரிந்தான். ஒன்பது வயதில்  ஒன்பது மைல் நடந்து ஆரம்பக் கல்வியைக் கற்றான்.  ஒரு நீக்ரோ பெண்ணை அடிமையாக விற்கப்படுவதைக் கண்டு  அதிர்ந்தான்.  இம் மாதிரியான கொடுமைகளை  தடுத்து நிறுத்த அரசியலில் ஈடுபடவேண்டும் என முடிவு  செய்தான். அரசியலில் குதித்தான்.

ட்டமன்ற தேர்தல், செனட் உறுப்பினர் தேர்தல் என போட்டியிட்டு வெற்றிபெற்ற அவன், அந்த நாட்டு ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றான்.

ணபலமில்லை, அரசியல் பின்புலம் இல்லை, கம்பீரத் தோற்றமும் இல்லை, கவர்ச்சியான செற்பொழிவாற்றும் திறமை இல்லை இவை எதுவும் இல்லாமல் அவனுடைய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அவனுடைய உழைப்பும், மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற  எண்ணமும் கைகொடுத்தன.

னாதிபதி ஆனதும் ஒரு பழைய காரை அவன் விலைக்கு வாங்கினான்.  அது கூட ஆடம்பரத்திற்காக அல்ல, பணிகளை விரைந்து முடிக்கலாமே என்ற ஆர்வத்தில்தான்!!! அரசு செலவில் ஓட்டுனர் வைத்துக் கொள்ள விதியிருந்தும், ஓட்டுனருக்கு கொடுக்கும் சம்பளப் பணத்தில் ஒரு  ஏழைக்கு உதவலாமே என்ற எண்ணத்தில் ஓட்டுனர் வைத்துக் கொள்ளாமல் அவனே காரை ஓட்டிசென்றான்.

ன்று பாராளுமன்ற கூட்டம்...  அதனால் அதிகாலையிலே ‌ எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு பாராளுமன்றத்தை நோக்கி காரை செலுத்தினான். போகும்வழியில் அவன் பார்வை ஓரிடத்தில் நிலைத்து நின்றது! ஆம்!! சாக்கடை தேங்கியிருந்த ஒரு பள்ளத்தில் ஓரு பன்றிக் குட்டி விழுந்து மேலே வரமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.

ந்தவழியில் சென்ற பலர் அதை வேடிக்கை பார்த்து சென்றனர். ஜனாதிபதியாகிய அவன் காரிலிருந்து இறங்கினான். அந்த பன்றியை காப்பாற்றினான். அதன் மீதிருந்த சாக்கடை துளிகள் அவன் ஆடையிலும் ஒட்டியது. அதைப்பற்றி கவலைப் படாமல் அவன் பாராளுமன்றம் நோக்கி பயனித்தான்.


அந்த  ஜனாதிபதி யார்?  அடுத்தப் பதிவில் காண்போம்.
தெரிந்தவர்கள் பின்னூட்டம் இடவும்.

முன்தின பதிவிற்கான விடை :   அந்த பேரறிஞன் கார்ல் மாக்ஸ்.


                                               2. தமிழனுக்காக வருந்திய ஜெர்மன் மனசு
                                               3 . முடிவெடுக்கக் கற்கலாமா?
                                    4.  பன்றிகளின் முன்னால் முத்தைச் சிதற விடாதேயுங்கள்
                                                  
தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....   

38 comments:

  1. ஒரு நாட்டின் அதிபர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர் உதாரணம்... எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு நம்மவர்கள் உதாரணம்.

    ReplyDelete
  2. என்னங்க இப்படி கிளம்பீட்டீங்க!

    இங்கேயும் கேள்வி கேட்டா எப்படி?

    ReplyDelete
  3. ஊகிக்கவே முடிஎலையே .:(
    நெல்சன் மண்டேலாவா ?!

    ReplyDelete
  4. கண்டிப்பா இது பிராதீபா பாட்டீல் இல்ல...

    ReplyDelete
  5. பதிவுலக ஃபீனிக்ஸ் வெல்கம் பேக்

    ReplyDelete
  6. ஆபிரஹாம் லிங்கன்னு நினைக்கிறேன்

    ReplyDelete
  7. வாத்தியார் வாத்தியார்தான். வசமா கேள்வி கேட்கிறீங்களே!நல்ல தகவல்கள், குரு மொழியாய் கேட்பது சுகம். சுவையான பகிர்வு.

    ReplyDelete
  8. என்னது இப்படி ஒரு ஜனாதிபதியா?

    ReplyDelete
  9. http://message.snopes.com/showthread.php?t=60395

    ReplyDelete
  10. இந்த பதிவை நம்முடைய ஜனாதிபதிக்கும் கொஞ்சம் அனுப்பிவிடுங்களேன்.அவர் பன்றியையெல்லாம் காப்பாற்ற்வேண்டாம் மக்களை காப்பாற்றினாலே போதும்.

    ReplyDelete
  11. இப்படியும் ஒரு ஜனாதிபதியா? யாருங்க அது சீக்கிரம் சொல்லுங்க? சஸ்பென்ஸ் தாங்கலை...

    ReplyDelete
  12. http://karurkirukkan.blogspot.com/2011/03/blog-post_11.html


    boss engayo poiteenga

    ReplyDelete
  13. ஆபிரகாம் லிங்கன்னு ஊருக்கே தெரிஞ்சு போச்சி!

    ReplyDelete
  14. தலைப்பு சூப்பரா இருக்கு ஹஹா

    ReplyDelete
  15. சுண்டியிழுக்கும் தலைப்புதான்!இந்த மாதிரி மனிதர்களெ
    ல்லாம் அபூர்வம் கருன்!பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  16. சென்னை பித்தன் சொன்னது…

    சுண்டியிழுக்கும் தலைப்புதான்!இந்த மாதிரி மனிதர்களெ
    ல்லாம் அபூர்வம் கருன்!பகிர்வுக்கு நன்றி!
    ////சார் உடம்பு எப்படிசார் இருக்கு? பரவாயில்லையா சார்...

    ReplyDelete
  17. இப்படி எல்லாம் இருந்து ஏழ்மையாக நடந்து காட்டி இருக்கிறார்கள் . ஆனால், தற்காலத்து ஜனாதிபதிகள் எல்லாம் அப்படியா ???
    லிங்கன் என்று தான் நினைக்கிறேன் . பதிலை சொல்லுங்கோ ?

    ReplyDelete
  18. ஆபிரஹாம் லிங்கன்??

    ReplyDelete
  19. ஆபிரஹாம் லிங்கன்.....கரெக்டா வாத்தியாரே..

    ReplyDelete
  20. ஆபிரகாம் லிங்கன் தான் அது வாத்தியாரே. துருபிடிசுபோன என்னமாதிரி மூளைக்கு வேலைவைகிறீர்களே நியாயமா இது. என்னோட பூங்காக்கு வந்து கருத்து வச்சதுக்கு ரொம்ப நன்றி சகோதரரே

    ReplyDelete
  21. ஆபிரகாம் லிங்கன்....
    சந்தேகமே இல்லை....

    ReplyDelete
  22. என்ன வாத்தி எங்களுக்கும் பரீட்சையா...???
    சரி சார்....நான் ரெடி....

    ReplyDelete
  23. ஆப்ரகாம் லிங்க்கன்
    நல்ல ஒரு பகிர்வு இதனை வழங்கும் விதம் சிறப்பு.

    ReplyDelete
  24. சந்தேகமே இல்லாமல் லிங்கன்தான். எனக்கு பிடித்த மனிதர்களுள் ஒருவர்.

    ReplyDelete
  25. சந்தேகமே இல்லாமல் லிங்கன்தான்...சந்தேகமே இல்லாமல் லிங்கன்தான்...சந்தேகமே இல்லாமல் லிங்கன்தான்...சந்தேகமே இல்லாமல் லிங்கன்தான்..சந்தேகமே இல்லாமல் லிங்கன்தான்...சந்தேகமே இல்லாமல் லிங்கன்தான்...சந்தேகமே இல்லாமல் லிங்கன்தான்....!சந்தேகமே இல்லாமல் லிங்கன்தான்....!சந்தேகமே இல்லாமல் லிங்கன்தான்....!சந்தேகமே இல்லாமல் லிங்கன்தான்....!சந்தேகமே இல்லாமல் லிங்கன்தான்....!சந்தேகமே இல்லாமல் லிங்கன்தான்....!சந்தேகமே இல்லாமல் லிங்கன்தான்....!சந்தேகமே இல்லாமல் லிங்கன்தான்....!சந்தேகமே இல்லாமல் லிங்கன்தான்....!சந்தேகமே இல்லாமல் லிங்கன்தான்....!சந்தேகமே இல்லாமல் லிங்கன்தான்....!சந்தேகமே இல்லாமல் லிங்கன்தான்....!சந்தேகமே இல்லாமல் லிங்கன்தான்....!சந்தேகமே இல்லாமல் லிங்கன்தான்....!சந்தேகமே இல்லாமல் லிங்கன்தான்....!சந்தேகமே இல்லாமல் லிங்கன்தான்....!

    ReplyDelete
  26. என்னண்ணே.... முக்கியமான சீன்ல தொடரும்னு போடுற மாத்ரி போட்டுடீங்களே....



    சரிண்ணே ஒரு சந்தேகம்.



    //ஓட்டுனருக்கு கொடுக்கும் சம்பளப் பணத்தில் ஒரு ஏழைக்கு உதவலாமே என்ற எண்ணத்தில் ஓட்டுனர் வைத்துக் கொள்ளாமல் அவனே காரை ஓட்டிசென்றான்.//



    அந்த ஓட்டுனருக்கு வேல குடுக்கலன்னா அவனே ஏழை ஆயிருவானே.. அப்புறம் போய் அவனுக்கு உதவறதுக்கு, வேலையே குடுத்துருக்கலமே...

    ReplyDelete
  27. முத்துசிவா சொன்னது…
    அந்த ஓட்டுனருக்கு வேல குடுக்கலன்னா அவனே ஏழை ஆயிருவானே.. அப்புறம் போய் அவனுக்கு உதவறதுக்கு, வேலையே குடுத்துருக்கலமே... /// இது வரலாறு நான் ஒன்னும் சொல்லுவதற்கு இல்லை... ஒருவருடைய வரலாற்று குறிப்பிலிருந்து ஒரு பகுதியை மட்டும் எடுத்து அவர் யார் என் கேட்கும் தொடர் பதிவு இது.. நன்றி.. தொடர்ந்து வாருங்கள்..

    ReplyDelete
  28. மொத்தத்துல இவரு நம்ம நாட்டு அரசியல்வாதி இல்லை. நம்மாளுங்க மடிப்பு கலையாம திரிவானுங்க...

    ReplyDelete
  29. நல்ல தகவல்.. அந்த ஜனாதிபதி ஒருவேளை இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவா இருக்குமோ???
    :அஷ்வின் அரங்கம்:
    வழக்குத்தொடுப்பேன் - வடிவேல் குமுறல்.

    ReplyDelete
  30. ஜப்பான் சுனாமி நேரடி படங்கள்
    http://www.spicx.com/2011/03/japan-tsunami-live-photos.html#axzz1GIkYZJ00

    ReplyDelete
  31. நல்ல ஜனாதிபதிகளைப்பத்தியெல்லாம் சொல்லி நம்ம மக்களைப் பெருமூச்சுவிட வைக்கிறது நல்லாவா இடுக்கு :)

    ReplyDelete
  32. //நல்ல ஜனாதிபதிகளைப்பத்தியெல்லாம் சொல்லி நம்ம மக்களைப் பெருமூச்சுவிட வைக்கிறது நல்லாவா இடுக்கு :)//

    ReplyDelete
  33. ஹும்ம்ம்ம் நமக்கு இல்லை அந்த அதிஷ்டம்.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"