Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/05/2011

மனதை தொட்ட கவிதைகள்



 1.

ரு
இலக்கணம் தெரிந்து
நான்,
கவிதை எழுதவில்லை
எனினும் எழுதுகிறேன்
நம்புவது,
தமிழை அல்ல
உன்   அழகை...!

**********************************************************************************
 2.

பெண்ணே...
கொஞ்சம் வெளியே வா,
“ நிலாவைக் காணாமல் ”
என்
எதிர்வீட்டுக் குழந்தை
சாப்பிட மறுக்கிறது...!

**********************************************************************************
 3.


ற்செயலாய்
வாசல் வந்து
நீ...
நின்றபோது
உன் அம்மா
“உள்ளேப் போ”
என்று சொன்னது
என் இதயத்திற்குள்
போகத்தானா?

**********************************************************************************
 4.


ன்னுடன்
பேசிவிட்டு வந்த
உரையாடலை,
கலைக்க மனமில்லாமல்
மற்றவர்கள் மத்தியில்
மரமாய்...!

**********************************************************************************
 5.


ப்படி
பாதுகாப்பேன்?
நீ...
நடந்துபோன
“கால்தடத்தை”...!

**********************************************************************************



முந்தைய பதிவுகள்:  



தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....  

35 comments:

  1. முதன் முதலாக முதன் முதலாக பரவசமாக பரவசமாகத்தான்...

    ReplyDelete
  2. உங்க கிட்டே இன்னைக்கு கேப்டன் கூட்டு பற்றி எதிர்பார்த்தேன்

    ReplyDelete
  3. இன்று என்னுடைய +1 மாணவர்களுக்கு பிராக்டிகள் EXAM . நண்பர்கள் அனைவரையும் 2'o clock meet பன்னுகிறேன்..

    ReplyDelete
  4. இது காகித பூக்கள் அல்ல..
    கவிதை பூக்கள்..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. “உள்ளேப் போ”//
    ஆஹா டச் பண்ணிட்டீங்க வாத்தியாரே

    ReplyDelete
  6. நீ...
    நடந்துபோன
    “கால்தடத்தை”.//
    சிமெண்ட் ரோடுல நடந்து போக சொல்லுங்க பாஸ்

    ReplyDelete
  7. படங்கள் எல்லாம் நல்ல தேர்வு

    ReplyDelete
  8. நன்றாக இருக்கிறது. இன்னும் முயற்சி தேவை/

    ReplyDelete
  9. வரிகள் மேம்மேலும் மெறுகேருகின்றன வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. காதல்ல ரொம்ப உருகீட்டீங்க போல....

    எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு....

    ReplyDelete
  11. காதல் ஒவ்வொரு வரியிலும் கொப்பளிக்கிறது.

    ReplyDelete
  12. இன்று என்னுடைய +1 மாணவர்களுக்கு பிராக்டிகள் EXAM . நண்பர்கள் அனைவரையும் 2'o clock meet பன்னுகிறேன்....////////////


    கடமை அழைக்கிறது

    ReplyDelete
  13. என்ன வாத்தியார் சார் ஒரே காதல் கவிதையா இருக்கு என்ன மர்மமோ..

    ///////பெண்ணே...
    கொஞ்சம் வெளியே வா,
    “ நிலாவைக் காணாமல் ”
    என்
    எதிர்வீட்டுக் குழந்தை
    சாப்பிட மறுக்கிறது...!
    என் மனதை தொட்ட கவிதை இது
    வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  14. காதலியைப் பற்றி நினைத்தாலே கவிதை பிரவாகமாய் வராதா!இலக்கணம் ஏன்?
    நன்று1

    ReplyDelete
  15. கவிதைகளும் அதற்க்கேற்ற படங்களும் அருமை.

    ReplyDelete
  16. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  17. சொல்லப்பட்டது யாராகினும், சொன்ன கவிதைகள் அனைத்துமே அருமை. வாழ்த்துக்கள், படைத்தவருக்கும் பகிர்ந்தளித்த தங்களுக்கும்.

    திருச்சியில் உள்ள என் நண்பர் கவிஞர் சேது மாதவனின் கவிதையொன்று:

    ”திண்ணையில் இருந்த அப்பா
    வீட்டுக்குள் வந்தார்
    புகைப்படமாக !”

    ReplyDelete
  18. நல்ல கவிதை, தொடருங்கள் நினைவுகளை..

    ReplyDelete
  19. நல்லாய் இருக்கு அண்ணா

    ReplyDelete
  20. //பெண்ணே...
    கொஞ்சம் வெளியே வா,
    “ நிலாவைக் காணாமல் ”
    என்
    எதிர்வீட்டுக் குழந்தை
    சாப்பிட மறுக்கிறது...!//

    அருமை அருமை மக்கா........

    ReplyDelete
  21. என்ன கொடுமை சார்..! எழுதுவது தமிழ்க்கவிதை.. ஆனால் நம்புவது அவளின் அழகையாம்..! ஆனாலும் காதல் மோகம் உங்கள் கண்களை ரொம்பவும்தான் மறைத்திருக்கிறது..! வாழ்த்துக்கள்..வளருங்கள்..!

    ReplyDelete
  22. கருன்...காதலின் வெளிப்பாடு அருமை.அதுவும் தன்னை மரமாக்கியது மிகவும் பிடிச்சிருக்கு !

    ReplyDelete
  23. கவிதையா, படங்களா என அனைத்திலும் ஜமாய்ச்சிடீங்க.

    ReplyDelete
  24. கவிதைகள் அருமை நண்பா

    ReplyDelete
  25. உருக்கும் கவிதைகள் ,அழகிய படங்களுடன்,நன்று கருன்

    ReplyDelete
  26. நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  27. மிக அருமை நண்பரே
    உன் முதல் எழுத்துக்கு
    என் முதல் மரியாதையை
    இப்படிக்கு
    அறிமுகம் இல்லாத நண்பர்
    ஜெமிநிவிவேக்.கே

    ReplyDelete
  28. அழகானவை அருமையானவை மனதைத்தொடுபவையாகஅமைந்தது
    வாழ்த்துகள்

    எங்க வீட்டுக்கும் வந்து போங்க தோழரே....

    ReplyDelete
  29. கடைசி இரண்டு கவிதைகளும் , பதிவின் தலைப்புக்கேற்ற கவிதைகள்..

    ReplyDelete
  30. நல்ல கவிதைகள்.

    அன்புடன் சாதாரணன்.

    ReplyDelete
  31. கவிதை எழுதுவதே சுகம்தான்!! அதிலும் மற்றவர் கவிதைகளை படிப்பதில் அலாதி சுகம் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  32. உணர்ந்து எழுதப்பட்ட கவிதை போல ?

    அருமை ...!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"