Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/02/2011

இந்த பதிவிற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று தெரியவில்லை




ட்டு குட்டியை
மடியில்போட்டு
ஈத்திக் கொண்டிருக்கும்
அம்மாவும்,
மாட்டுக்கு
லாடம்கட்ட
ஆணி அடித்துக் கொண்டிருக்கும்
அப்பாவும்,
படிக்கவில்லை
“ உயிர்களிடத்தில் அன்பு வேணும் ” 
( நன்றி இளம்பிறை)



ம்மா
அடுப்பை பற்றவை
குளிராவது காயலாம்...!



சிறகுகளை இழப்பதா?
அதைவிட எளிது
உயிர் விடுவது...!


 குடிப்பழக்கத்தை
விடவேண்டி
பெருமாளிடம் வேண்டிக்கொண்டு
உண்டியல்ல சேர்த்துவெச்ச
காசையெல்லாம்
செலவழிக்க வேண்டியதாயிற்று
கள்ளச் சாராயத்தில்
செத்த கணவனுக்காக....!


முந்தைய பதிவுகள்:     1. சினிமா கிசுகிசு மட்டும்தான் படிப்பீங்களா?
                                                     2.  இந்திய வெளியுறவுத் துறை                                                                                                 3. இனி சன்டேன்னா சினிமாதான்...


யவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....

57 comments:

  1. முதன்முதலாக.. முதன்முதலாக... பரவசமாக பரவசமாகத்தான்...

    ReplyDelete
  2. >>>>அம்மா
    அடுப்பை பற்றவை
    குளிராவது காயலாம்...!

    மகுடம் வைத்தாற்போன்ற கவிதை.. பாராட்டுக்கள்

    ReplyDelete
  3. இன்னும் ஒரு ஹைக்கூ சேர்த்து டைட்டிலை ஐஞ்சிறுங்காப்பியங்கள்னு வைக்கலாம்...

    ReplyDelete
  4. ம்ம்..கலக்குங்க...
    அந்த ரெண்டாவது கவித

    //அம்மா
    அடுப்பை பற்றவை
    குளிராவது காயலாம்...!//

    எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...

    ReplyDelete
  5. கவிதைகள் ஒவ்வொன்றும் அழகு....பேரா முக்கியம் விடுங்க பாஸ்

    ReplyDelete
  6. //காசையெல்லாம்
    செலவழிக்க வேண்டியதாயிற்று
    கள்ளச் சாராயத்தில்
    செத்த கணவனுக்காக....!//

    நச் வரிகள்... இன்னும் இந்த அவலம் இருந்து கொண்டு தான் இருக்கிறது...

    ReplyDelete
  7. ரஹீம் கசாலி கிட்ட கேளுங்க பாஸ் என்ன தலைப்பு எப்பிடி தலைப்பு வைக்கலாம்ன்னு

    ReplyDelete
  8. "அடுப்பை பற்றவை
    குளிராவது காயலாம்'...நெஞ்சைத்தொட்டாலும்

    இறுதி
    /காசையெல்லாம்
    செலவழிக்க வேண்டியதாயிற்று
    கள்ளச் சாராயத்தில்
    செத்த கணவனுக்காக....!// கனக்கிறது.

    ReplyDelete
  9. எல்லா கவிதைகளும் அருமை தலைவா.

    ReplyDelete
  10. கடைசி கவிதை - நாட்டு நடப்பின் சோக பகுதி... மனதை கனக்க வைக்கும் பக்கம்.

    ReplyDelete
  11. கவிதைகள் அருமை என்று சொல்வதை விட முள் தைக்கப்பட்ட சட்டை இந்தப்பதிவு!

    ReplyDelete
  12. எல்லாமே சூப்பரோ சூப்பருங்கோ!

    ReplyDelete
  13. இப்படி தலைப்பு வெச்செல்லாம் ஹிட் அடிக்கிறீயே பாஸ்

    ReplyDelete
  14. கவிதைகள் சரம் மணம் மயக்கும் முல்லை சரம்

    ReplyDelete
  15. முதல் கவிதை விகடனில் முத்திரை கவிதையாக ஏற்கனவே படித்திருக்கிறேன் !

    ReplyDelete
  16. கவிதைகள் அசத்தல்..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  17. முதல் கவிதை ஆனந்த விகடனில் முத்திரை கவிதையாக வெளி வந்தது..

    ReplyDelete
  18. அம்மா
    அடுப்பை பற்றவை
    குளிராவது காயலாம்...!///////////////////

    வறுமையின் வெளிப்பாடு அருமையான வரிகள் ............

    ReplyDelete
  19. அருமை அருமை கரூன் இலக்கிய விழுது என்பதை நிரூபித்துவீட்டீர்

    விருது கொடுத்துருக்கோம் வாங்க

    நாமே ராஜா, நமக்கே விருது-4

    http://speedsays.blogspot.com/2011/03/4.html

    ReplyDelete
  20. சிந்திக்கத்தூண்டும் வரிகள்..நன்றி...தொடருங்கள்..

    ReplyDelete
  21. அம்மா
    அடுப்பை பற்றவை
    குளிராவது காயலாம்...!

    அருமையான வரிகள்...

    ReplyDelete
  22. ////சிறகுகளை இழப்பதா?
    அதைவிட எளிது
    உயிர் விடுவது...!

    //// இதைவிட உயர்வு வேறேது? நன்றி! வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  23. தலைப்பை விடுங்கள்... அவசியமில்லை! உங்களுக்கு "சின்னக் குத்தூசி" என்று பெயர் வைத்தால் பொருத்தமாக இருக்கும்! :))))))))))

    ReplyDelete
  24. kumar k

    kavithaigal super!!!!

    ReplyDelete
  25. கவிதை வரிகள் ஒவ்வொன்றும் உணர்வுகள் கலந்த வலிகள்..

    சிறப்ப்பாக எழுதியிருக்கீங்க ஆசிரியரே, நன்றி

    ReplyDelete
  26. //அம்மா
    அடுப்பை பற்றவை
    குளிராவது காயலாம்...!//
    இதைவிட நெக்குருகி ஏழ்மையை சொல்லிவிட முடியாது.

    ReplyDelete
  27. என்னுடைய பின்னூட்டங்கள் வரலேன்னு குமார் கே வா ஒரு "டெஸ்ட்" பின்னூட்டம் போட்டேன்..அது வந்துருச்சு..ஆனா முன்னாடி நான் போட்ட பின்னூட்டம வரலே யே ஏன்?

    ReplyDelete
  28. எல்லா கவிதைகளுமே சூப்பரா இருக்குங்க.

    ReplyDelete
  29. கிருஷ்குமார் சொன்னது…

    என்னுடைய பின்னூட்டங்கள் வரலேன்னு குமார் கே வா ஒரு "டெஸ்ட்" பின்னூட்டம் போட்டேன்..அது வந்துருச்சு..ஆனா முன்னாடி நான் போட்ட பின்னூட்டம வரலே யே ஏன்?
    //// நீங்க சொன்னதை சரிபார்த்து கொண்டிருந்தேன் தலைவா வேற ஒன்னும் இல்லை...

    ReplyDelete
  30. கிருஷ்குமார் சொன்னது…

    முதல் கவிதை விகடனில் முத்திரை கவிதையாக ஏற்கனவே படித்திருக்கிறேன் !
    //// கவிதையின் கரு ஒன்றுதான் ஆனால் கவிதை வேறு இருந்தாலும் நன்றி போட்டுவிட்டேன் நண்பரே ....

    ReplyDelete
  31. Speed Master சொன்னது…

    அருமை அருமை கரூன் இலக்கிய விழுது என்பதை நிரூபித்துவீட்டீர்

    விருது கொடுத்துருக்கோம் வாங்க //// காலையிலே வந்துவிட்டேன் பாருங்க..

    ReplyDelete
  32. வேடந்தாங்கல் - கருன் சொன்னது…

    கவிதையின் கரு ஒன்றுதான் ஆனால் கவிதை வேறு இருந்தாலும்
    //
    வரிக்கு வரி ஒத்து போவது ஆச்சர்யம் தான்!
    தங்கள் பதிலுக்கும் கவிஞரின் பெயர் குறிபிட்டமைக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  33. ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

    இப்படி தலைப்பு வெச்செல்லாம் ஹிட் அடிக்கிறீயே பாஸ்
    ////இதுல இப்படி ஒரு விஷயம் இருக்கா?

    ReplyDelete
  34. Matra kavithaigalum nanraaga irunthathu..Vaalthukkal..

    ReplyDelete
  35. அன்பு தோழரே,

    ரொம்ப அருமையாயிருந்தது எல்லா கவிதைகளும்... பேரில்லாமல் விடுவது தான் வசதி... பொருத்தமாய் ஒரு பேர் வைக்க படிக்கிறவர்களுக்கு தோதுவாய் இருக்கும், அவர்களுக்கு அர்த்தப்படுவதை வைத்துக் கொண்டு.

    அன்புடன்
    ராகவன்

    ReplyDelete
  36. //அம்மா
    அடுப்பை பற்றவை
    குளிராவது காயலாம்...!//
    ஏற்கனவே வயிறு காய்கிறது!
    அருமை!

    ReplyDelete
  37. அருமைன்னு பேர் வைங்க, உண்மையிலேயே அனைத்தும் அருமை...

    ReplyDelete
  38. எல்லாக் கவிதையும் சூப்பர் கருன்..:)

    ReplyDelete
  39. நல்லா இருக்கு சார்..

    ReplyDelete
  40. //ஆட்டு குட்டியை
    மடியில்போட்டு
    ஈத்திக் கொண்டிருக்கும்
    அம்மாவும்,
    மாட்டுக்கு
    லாடம்கட்ட
    ஆணி அடித்துக் கொண்டிருக்கும்
    அப்பாவும்,
    படிக்கவில்லை
    “ உயிர்களிடத்தில் அன்பு வேணும் ”
    ( நன்றி இளம்பிறை)//

    இதை நான் முன்பே படிச்சிருக்கேன்.
    சூப்பர்....

    ReplyDelete
  41. //குடிப்பழக்கத்தை
    விடவேண்டி
    பெருமாளிடம் வேண்டிக்கொண்டு
    உண்டியல்ல சேர்த்துவெச்ச
    காசையெல்லாம்
    செலவழிக்க வேண்டியதாயிற்று
    கள்ளச் சாராயத்தில்
    செத்த கணவனுக்காக....!//

    உருக்கமான கவிதை மக்கா...
    மனசு வலிக்குது....

    ReplyDelete
  42. வாங்க மனோ சார் . பக்ரைனில் முழுவேலைநிறுத்தமாமே உண்மையாகவா?

    ReplyDelete
  43. கடைசியில்.....நச்சுன்னு... உண்மையாவே எங்காவது நடந்திருக்கும்.

    ReplyDelete
  44. வணக்கம் கருன் சார்.நலம்தானே?சிறது நாட்களாக நெட் கனெக்க்ஷன் இல்லை.அதனால் உங்களது படைப்புகளுக்கு பதிலுரை போடமுடியவில்லை.கவிதைகள் மூன்றுமே அருமை.விழுகிறசொற்கள் வார்த்தைகளாகி,வார்த்தைகள் மெருகேறி கதைகளாய்,கவிதைகளாய் விரிகிற தருணம் பிரசவித்த குழந்தையை பார்க்கிற தாயின் மனோநிலைதானே?அந்த மனோநிலை படைபை படைக்கிற படைப்பாளிக்கும் வருகிறதுதானே?அப்படி வருகிற நேரத்திய சந்தோஷத்தை தருகிற படைப்புகள் நமக்கு உவப்பானதாய் இருக்கிறது.அதை உங்களது படைப்புகள் சொல்வதில் மிகுந்த சந்தோஷம்.

    ReplyDelete
  45. சிறிதாக சில...என்று வைத்தால்???

    ReplyDelete
  46. அந்த தாயின் கையில் உள்ள குழந்தை முகத்தை பாருங்க .அது எந்த சூழ்நிலையில் எடுக்கப்பட்ட படமோ எனக்கு தெரியல ஆனா அந்த கவிதைக்கு
    சூப்பரா பொருந்துது .
    thanks for sharing.

    ReplyDelete
  47. அட அட அட.. கலக்கறீங்களே தல, எப்படி எல்லாம் தலைப்பு வச்சு எங்கள இழுக்கறீங்க.. கவிதைகள் எல்லாமே ரொம்ப அருமையா இருக்கு.. :)

    ReplyDelete
  48. எல்லாக் கவிதையும் சூப்பர்

    ReplyDelete
  49. ////அம்மா
    அடுப்பை பற்றவை
    குளிராவது காயலாம்...!///

    ஒற்றை வரியில் சூப்பர் அர்த்தம்

    வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில் . மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

    ReplyDelete
  50. கடந்த நாலு நாளா என்ன முயற்சி செஞ்சும் உங்க பதிவு எனக்கு ஓப்பனே
    ஆகலை.அதான் கமென்ட் போட முடியல.

    எல்லாமே அருமை."நான்கு திசைகள்" தலைப்பு வச்சுருக்கலாம்

    ReplyDelete
  51. குடிப்பழக்கத்தை
    விடவேண்டி
    பெருமாளிடம் வேண்டிக்கொண்டு
    உண்டியல்ல சேர்த்துவெச்ச
    காசையெல்லாம்
    செலவழிக்க வேண்டியதாயிற்று
    கள்ளச் சாராயத்தில்
    செத்த கணவனுக்காக....!
    கணக்கும் வரிகள் .அருமையாக உள்ளது. பெற்ற குழந்தைக்கு பெயர் வைக்க முடியவில்லையா?

    ReplyDelete
  52. அத்தனையும் முத்துக்கள்

    ReplyDelete
  53. ஒவ்வொண்ணும் நல்லா இருக்குங்க.... ஆனா முதல் கவிதை,, லாடம் அடிப்பது அந்தந்த விலங்குகளுக்கு நல்லதுதான்..

    இரண்டும் மூன்றும் மூன்றே வரிகளில் பிரமாதம்!!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"