Tamilus

The best Tamil Aggregator | Tamilus

2/28/2011

சினிமா கிசுகிசு மட்டும்தான் படிப்பீங்களா?


மக்கு தெரியாமலே
நாம் கொத்தடிமைகள்
உலகமயமாதல்...!

***********************************************************************************


னம் வளர்க்கும்
தற்கொலை படைகள்
இலைகள்...!

***********************************************************************************


பாலின் மேலாடை
பார்த்துக் கொண்டே இருந்தாள்
கிழிந்த சேலையோடு
அம்மா...!

***********************************************************************************


டுத்த வீட்டு அண்ணன்
மாலை போட்டு இருக்கிறார்...
பத்து வயதுக்கு மேலேயும்
அறுபது வயதுக்கு கீழேயும்
சாமிக்கு பிடிக்காதுன்னு
சொல்றா அக்கா
ஏம்மா?

***********************************************************************************

 
ந்த வகையிலாவது
எவரையாவது
சமாதானப்படுத்திக் கொண்டே
இருக்க வேண்டியிருக்கிறது
தினம் தினம்
யாரும் கிடைக்காவிட்டால் என்னை...!

***********************************************************************************

முந்தைய பதிவுகள்: 1. அறிவியலும், சில காதல் கவிதைகளும்...                                                                      2. இந்திய வெளியுறவுத் துறை                                                
                                             3. இனி சன்டேன்னா சினிமாதான்...


தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....  

32 comments:

  1. நமக்கு தெரியாமலே
    நாம் கொத்தடிமைகள்
    உலகமயமாதல்...!


    ......ஆழமான கருத்து! கவிதைகள் எல்லாம் எதார்த்தம்!

    ReplyDelete
  2. //பாலின் மேலாடை
    பார்த்துக் கொண்டே இருந்தாள்
    கிழிந்த சேலையோடு
    அம்மா...!//

    உண்மைதான்...

    ReplyDelete
  3. கலக்கல் கருன்

    நன்றி
    ஜேகே

    ReplyDelete
  4. //பத்து வயதுக்கு மேலேயும்
    அறுபது வயதுக்கு கீழேயும்
    சாமிக்கு பிடிக்காதுன்னு
    சொல்றா அக்கா
    ஏம்மா?//

    நல்லா இருக்கு, கருன்!

    ReplyDelete
  5. எல்லாமே நன்றாக உள்ளது கருன் சார்.

    ReplyDelete
  6. //யாரும் கிடைக்காவிட்டால் என்னை...!//
    எதார்த்தம்!

    ReplyDelete
  7. //நமக்கு தெரியாமலே
    நாம் கொத்தடிமைகள்
    உலகமயமாதல்...!


    நல்லாருக்கு

    ReplyDelete
  8. எந்த வகையிலாவது
    எவரையாவது
    சமாதானப்படுத்திக் கொண்டே
    இருக்க வேண்டியிருக்கிறது
    தினம் தினம்
    யாரும் கிடைக்காவிட்டால் என்னை...!கவிதைகள் எதார்த்தம்...நல்லாருக்கு

    ReplyDelete
  9. வர்ர வழியில நிறைய டிராபிக் அதான் வர்றதுக்கு கொஞ்சம் லேட் ஆகிடுச்சு.

    கவிதை வரிகளும், படங்களும் மிக அருமை.( ஏதோ நமீதா பற்றி கிசு கிசுன்னு நினைச்சு டிராபிக்லயும் வேகமா வந்தேன்... ஆனா...)

    ReplyDelete
  10. ///இனம் வளர்க்கும்
    தற்கொலை படைகள்
    இலைகள்...!/// அருமை அண்ணா

    ReplyDelete
  11. //யாரும் கிடைக்காவிட்டால் என்னை...!//

    சூப்பர் டச்சிங்......

    ReplyDelete
  12. எல்லாமே நன்றாக உள்ளது

    ReplyDelete
  13. கவிதையா போட்டுத்தாக்கறீங்களே..

    ReplyDelete
  14. நல்லாருக்கு வாத்தியாரே

    ReplyDelete
  15. பாலின் மேலாடை
    பார்த்துக் கொண்டே இருந்தாள்
    கிழிந்த சேலையோடு
    அம்மா...!///


    எனக்கு பிடித்தது.. :))

    ReplyDelete
  16. சின்ன சின்ன வரிகள்
    பெரிய பெரிய கருத்துக்கள்...
    சில கவிதைகளுக்கு இன்னும் பொருத்தமான படங்கள் இட்டால் இன்னும் செறிவு கூடும்.

    ReplyDelete
  17. நமக்கு தெரியாமலே
    நாம் கொத்தடிமைகள்
    உலகமயமாதல்...!

    Point.. Super

    ReplyDelete
  18. தினம் தினம்
    யாரும் கிடைக்காவிட்டால் என்னை...!//
    சூப்பரான வரிகள்

    ReplyDelete
  19. இன்னும் கொஞ்சம் மெனெக்கெட்டால் மிகப் பிரமாதமான கவிதை உங்களிடம் கிடைக்கும்..

    ReplyDelete
  20. "நமக்கு தெரியாமலே
    நாம் கொத்தடிமைகள்
    உலகமயமாதல்...!"
    உண்மை

    ReplyDelete
  21. கலக்கல் கவிதைகள். பாடங்கள் மட்டுமல்ல பாடல்களும் நன்றாய் படைப்பேன் என்று நிரூபணம்

    ReplyDelete
  22. கவிதையும் படங்களும் மிகவுமருமை நண்பரெ,அடிக்கடி வருகிறேன் இனி

    ReplyDelete
  23. கருன்...கடைசி இரண்டும் பிடிச்சிருக்கு !

    ReplyDelete
  24. அருமையான வரிகள். ரசித்தேன்.

    ReplyDelete
  25. கலக்கல் கவிதைகள். எல்லாமே நல்லா இருக்கு.

    ReplyDelete
  26. சின்னச்சின்னக் கவிதைகள்ன்னாலும் 'சுருக்'ன்னு தைக்குது.

    ReplyDelete
  27. நமக்கு தெரியாமலே
    நாம் கொத்தடிமைகள்
    உலகமயமாதல்...!//
    SUPER!!!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"