Tamilus

The best Tamil Aggregator | Tamilus

2/10/2011

போங்கடா.. நீங்களும் உங்க அரசியலும்

சில மாதங்களாக, இந்தியாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை மிக மிக உயர்ந்து வருகிறது. உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு, பெரிய வியாபாரிகளின் பதுக்கல் மட்டும் அல்ல, மத்திய, மாநில அரசின் நிர்வாக சீர்கேடும் தான் காரணம்.

சென்ற ஆண்டு, சிம்லாவில் ஆப்பிள் விளைச்சல், பன்மடங்கு அதிகமாக இருந்தது. அதனால், சென்னையில், தரம் குறைவான ஆப்பிள், கிலோ நாற்பது ரூபாய்க்கும், தரமானது கிலோ ஐம்பது ரூபாய்க்கும் கிடைத்தது.

பொதுவாக இந்த ஆப்பிளை, கிலோ 120 ரூபாய்க்கு விற்பது வழக்கம். சென்ற ஆண்டு குறைவான விலைக்கு விற்ற ஆப்பிள் விவசாயிகளுக்கு, மத்திய அரசு ஊக்கத் தொகை தந்ததா? பொருட்களின் விலை குறைவாக உள்ளபோது, தங்களது நடவடிக்கையால் தான், விலை குறைந்துள்ளது என அமைச்சர்கள் சொல்கின்றனர். 

ஆனால், உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயரும் போது, அவர்கள் அதற்கு பொறுப்பேற்பதில்லை. மக்கள் நன்மையை சிறிதும் கருதாமல், பெட்ரோல், டீசல் விலையை அடிக்கடி உயர்த்தும் மத்திய அரசு, இவை நியாயம் தானா என யோசிக்க வேண்டும்.

கச்சா எண்ணெய் பேரல், 140 டாலராக விற்ற போது, இந்தியாவில் பெட்ரோல் விலை, லிட்டர் 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கச்சா எண்ணெய் தற்சமயம், 92 டாலராக தான் உள்ளது. ஆனால், லிட்டர் 63 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கணக்கு சரியாக இல்லையே. 

இதை மத்திய நிதிஅமைச்சர் தான் விளக்க வேண்டும்.  பெரும்பாலும் எல்லா அமைச்சர்களும், கபில்சிபல் போல், உண்மையை மறைத்து, போலியாக பேசுகின்றனர். தேசப்பற்று இல்லாமல், சுயலாபத்துக்காக செயல்படுகின்றனர். ( நன்றி தினமலர்)

மக்கள் தங்கள் வாழ்க்கைக்காகவும், வயிற்றுப் பிழைப்புக்காகவும், விலைவாசியின் உயர்வுடன் போராடி, தினம், தினம், அவரவர் நிலைமைக்கும், திறமைக்கும், மேலும் உழைக்கின்றனர். ஆனால், யாருடைய மனதிலும் நிம்மதியில்லை. இதற்கு மேல் உழைக்க முடியாது; மனித உடம்பு இயந்திரம் இல்லையே!



தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், கவிதை பிடித்திருந்தால்  அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.

                                         2. என்னடா உலகமிது...

42 comments:

  1. என்னா இப்படி சொல்லிட்டீங்க அதான் எல்லாத்தையும் இலவசமா குடுக்குரோம்ல வாங்கிகிட்டு போட்டு இருக்குற எல்லாத்தையும் உட்டுட்டு இனி பிறந்த மேனியா வாழ கத்துக்க வேண்டியதுதான்

    ReplyDelete
  2. என்னா இப்படி சொல்லிட்டீங்க அதான் எல்லாத்தையும் இலவசமா குடுக்குரோம்ல வாங்கிகிட்டு போட்டு இருக்குற எல்லாத்தையும் உட்டுட்டு இனி பிறந்த மேனியா வாழ கத்துக்க வேண்டியதுதான்

    ReplyDelete
  3. //மக்கள் தங்கள் வாழ்க்கைக்காகவும், வயிற்றுப் பிழைப்புக்காகவும், விலைவாசியின் உயர்வுடன் போராடி, தினம், தினம், அவரவர் நிலைமைக்கும், திறமைக்கும், மேலும் உழைக்கின்றனர். ஆனால், யாருடைய மனதிலும் நிம்மதியில்லை. இதற்கு மேல் உழைக்க முடியாது; மனித உடம்பு இயந்திரம் இல்லையே!//

    ஒன்றும் சொல்வதற்கில்லை... :(((

    ReplyDelete
  4. இது தவிரவும் ,சில இடங்களில் பருப்பு போன்றவற்றை பயிரிடாமல் நமக்கு அதிகம் தேவையில்லாத கார்ன் போன்றவற்றை விவசாயிகள் பயிரிட தூண்டப்பட்டதும் ஒரு காரணமாம் .

    ReplyDelete
  5. தலைப்பு அருமை .
    அருமையா எழுதி இருக்கீங்க.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. சில தனியார்களுக்கு லாபம் செல்வதால் மக்கள் பணம் சுரண்டப்படுகிறது

    ReplyDelete
  7. அருமையான பகிர்வு//மக்கள் தங்கள் வாழ்க்கைக்காகவும், வயிற்றுப் பிழைப்புக்காகவும், விலைவாசியின் உயர்வுடன் போராடி, தினம், தினம், அவரவர் நிலைமைக்கும், திறமைக்கும், மேலும் உழைக்கின்றனர். ஆனால், யாருடைய மனதிலும் நிம்மதியில்லை. இதற்கு மேல் உழைக்க முடியாது; மனித உடம்பு இயந்திரம் இல்லையே!
    // மிகச்சரியாக சொன்னீர்கள்.

    ReplyDelete
  8. டாக்டர் ராஜசேகர் படம் இல்லையா?

    ReplyDelete
  9. மக்கள் தங்கள் வாழ்க்கைக்காகவும், வயிற்றுப் பிழைப்புக்காகவும், விலைவாசியின் உயர்வுடன் போராடி, தினம், தினம், அவரவர் நிலைமைக்கும், திறமைக்கும், மேலும் உழைக்கின்றனர். ஆனால், யாருடைய மனதிலும் நிம்மதியில்லை. இதற்கு மேல் உழைக்க முடியாது; மனித உடம்பு இயந்திரம் இல்லையே!



    ...Thats why ethics dies off.... வேதனையான அவல நிலை.

    ReplyDelete
  10. எல்லாம் எழுதி வைக்க பட்ட விதி

    ReplyDelete
  11. பெட்ரோல் மீதான மத்திய அரசின் கலால் வரி 50% இதை குறைத்தாலே போதும் எல்லா விலையும் கட்டுக்குள் வரும் .........

    ReplyDelete
  12. பெட்ரோல் விலையை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தாலே எல்லா பொருட்களின் விலையும் கட்டுபாட்டுக்குள் வந்துவிடும்

    ReplyDelete
  13. //இதற்கு மேல் உழைக்க முடியாது; மனித உடம்பு இயந்திரம் இல்லையே!
    //உண்மை. அருமையான கருத்து. நாம கஷ்டப் பட்டு உழைக்கும் பணம் ஏதோ ஒரு வழியில் சுவிஸ் வங்கியில் போய் தூங்கிகொண்டிருக்கிறது. நாம் மேலும் மேலும் கஷ்டப் படுகிறோம், காரணம் தெரியாமலே.

    ReplyDelete
  14. //இதை மத்திய நிதிஅமைச்சர் தான் விளக்க வேண்டும்//

    ஆட்சியில் இருப்பவர்களுக்கு சுரண்டவும் ஊழல்கள் செய்யவுமே
    நேரம் சரியாக உள்ளது.இதில் இதை எல்லாம் யார் காதில் போட்டுக் கொண்டு
    மக்களின் பிரச்சனைகளை தீர்க்கப் போகிறார்கள்.
    நம் புலம்பல்கள் யாருக்கும் கேட்க போவதில்லை

    ReplyDelete
  15. //மத்திய, மாநில அரசின் நிர்வாக சீர்கேடும் தான் காரணம்//

    அரசுன்னு சொல்றதை விட அலிபாபாவும் நாப்பது திருடர்க்களும்னு சொல்லலாம்.
    பின்னே இவனுக இவங்க பிரச்சினையையே பாக்குரானுகளே அல்லாமல் மக்களை பற்றி சிந்திக்க வில்லை.......

    ReplyDelete
  16. கஷ்டப்பட்டு செலவு செஞ்சி.. ரவுடிசம் பண்ணி.. அடுத்தவன் வயிற்றி அடித்து.. ஆட்சிக்கு வந்தா நாங்க எங்கள பாக்கறதா.. இல்லை ஜனங்களையா..
    எங்களுக்கு எங்க வருமானம் தான் முக்கியம் என்கின்றனர் தற்போதைய அரசியல் வாதிகள்...

    ReplyDelete
  17. மக்கள் தங்கள் வாழ்க்கைக்காகவும், வயிற்றுப் பிழைப்புக்காகவும், விலைவாசியின் உயர்வுடன் போராடி, தினம், தினம், அவரவர் நிலைமைக்கும், திறமைக்கும், மேலும் உழைக்கின்றனர். ஆனால், யாருடைய மனதிலும் நிம்மதியில்லை. இதற்கு மேல் உழைக்க முடியாது; மனித உடம்பு இயந்திரம் இல்லையே!


    உண்மைதான்..நண்பரே..

    ReplyDelete
  18. மக்களிடம் வாங்கும் திறன் அதிகரிச்சிட்டதா கலைஞர் சொல்றாரே. இல்லைன்னா 15000 கோடி வருமானம் டாஸ்மாக் மூலம் வருமான்னு கேட்கிறார்.

    ReplyDelete
  19. 90000 ஹேக்டேர் விவசாய நிலங்களை பெப்சி அண்ட் கோ வாங்கி சோளம் பயிரிடுகிறது. எதற்காக.. தெரியுமா... ? லேஸ் பாக்கெட்டுகளை விற்று.. நம் சந்ததிகளின் உடல் நலத்தை கெடுப்பதற்கு. நாம் யாரும் இதை எதிர்த்து குரல் கொடுக்கக்கூட திராணியற்று இருக்கிறோம்.

    ReplyDelete
  20. அட பக்கத்து நாட்டுல எல்லாம் பெட்ரோல், டீசல் விலை ரொம்ப குறைவு சார்... நல்லா கொள்ள அடிகிறாங்க சார்....

    ReplyDelete
  21. போங்க பாஸ் யாரு சொல்லி இவங்க திருந்த போறாங்க

    ReplyDelete
  22. அருமையான பகிர்வு, விலைவாசி உயர்கிறது ஆனால் எந்த விவசாயியாவது அதிகமான வருமானம் பார்க்கிறானா தனது விளைச்சலில் என்றால் இல்லை, வெங்காயத்தை 10 ரூபாய்க்கு தான் விற்கிறான் 90 ரூபாய்க்கு சந்தைகளில் விற்கும் வெங்காயத்தை..

    தங்களது பதிவை இங்கு இணைத்துள்ளேன்..
    http://www.tamilnadutalk.com/portal/index.php?/topic/19490-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81/

    ReplyDelete
  23. மக்கள் தங்கள் வாழ்க்கைக்காகவும், வயிற்றுப் பிழைப்புக்காகவும், விலைவாசியின் உயர்வுடன் போராடி, தினம், தினம், அவரவர் நிலைமைக்கும், திறமைக்கும், மேலும் உழைக்கின்றனர். ஆனால், யாருடைய மனதிலும் நிம்மதியில்லை. இதற்கு மேல் உழைக்க முடியாது; மனித உடம்பு இயந்திரம் இல்லையே!

    சூப்பர் சார்! அருமையாச்சொல்லி இருக்கீங்க! இதெல்லாம் உரியவர்களுக்குப் புரியுமா?

    ReplyDelete
  24. இப்ப எதுக்கு டென்ஷன் ஆகறிங்க.. நாம என்ன கத்தினாலும் இன்னும் 6 மாசத்துல மறுபடியும் விலை எற்றதான் போறாங்க.. அதுக்கு நாம் கொடுக்க போற சரியான பதிலடி ஆட்சி மாற்றம்.

    ReplyDelete
  25. போட்டமில்ல ஒட்டு..

    ReplyDelete
  26. பின்னுட்டம்இட்டு உங்கள் கருத்தை பகிர்ந்த அத்தனை பேருக்கும் என் நன்றிகள்...

    ReplyDelete
  27. வந்திட்டோம்ல.
    நல்ல விழிப்புணர்வு பதிவு. வாழ்துக்கள்.
    சதீஷ் சார், அடுத்த ஆறு மாதம் கழித்து விலை ஏறுமா? நாளையே பெட்ரோல் விலை ஏறலாம். ஜாக்கிரதை!

    ReplyDelete
  28. இதெல்லாம் யாருக்கையா
    கேட்கப்போகுது ?
    அரசியல்வாதி =ரௌடிஸ்

    ReplyDelete
  29. ஒன்னிலேந்து ஒன்னு செயின் மாதிரி விலை ஏறுது.பெட்ரோல் விலை ஏறினா தொடர்ந்து டீசல் ஆட்டோ, கேஸ்,காய்கறின்னு, வரிசையா எவ்வளவு சுமை
    கள். மிடில் க்ளாஸ் மக்கள்தான் மேலயும் போக முடியாம கீழயும் போக முடியாம தவிக்குராங்க.

    ReplyDelete
  30. ப்ரஸன்ட் சார் (உள்ளேன் அய்யா)..

    ReplyDelete
  31. என்னத்த சொல்ல... யார் வந்தாலும் மக்கள் வயத்துல அடிக்கறாங்களே... எங்க போய் நியாயத்தை கேட்க.. சொல்லுங்க.. ;-)

    ReplyDelete
  32. உண்மையை அப்படியே சொல்லி இருக்கிறீர்கள். அருமையான பதிவு. வோட்டும் போட்டாச்சு.

    ReplyDelete
  33. நல்ல பதிவு.. இன்னும் ஆக்ரோஷம் வெளிப்பட்டிருக்கலாமோன்னு தோணுச்சு..

    ReplyDelete
  34. ஹலோ,
    நாம எவ்வளவு தான் கத்தினாலும் ஒன்னும் ஆகபோரதில்லை,ஏனெனில்
    காசு வாங்கிட்டு ஓட்டு போடும் மரமண்டைகள் உள்ளவரை!இனாமை வாங்கிட்டு பல் இளிக்கும் பாமரன் இருக்கும் வரை!

    ReplyDelete
  35. ///கச்சா எண்ணெய் தற்சமயம், 92 டாலராக தான் உள்ளது. ஆனால், லிட்டர் 63 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கணக்கு சரியாக இல்லையே.
    /// கூட்டிக் கழிச்சுப் பார்த்தா சரியா வரும்.. என்ன நான் சொல்றது..?

    ReplyDelete
  36. //நாம எவ்வளவு தான் கத்தினாலும் ஒன்னும் ஆகபோரதில்லை,ஏனெனில்
    காசு வாங்கிட்டு ஓட்டு போடும் மரமண்டைகள் உள்ளவரை!இனாமை வாங்கிட்டு பல் இளிக்கும் பாமரன் இருக்கும் வரை!
    // சரிதான்.. ஆனால் இன்னொரு மகாத்மா வந்தாலும் இதையெல்லாம் தடுக்க முடியுமா? என்பது தான் வேதனை..? arbrunei..

    ReplyDelete
  37. போங்கடா.. நீங்களும் உங்க அரசியலும்

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"