Tamilus

The best Tamil Aggregator | Tamilus

1/29/2011

தமிழன் என்று சொல்லடா.. தலை குனிந்து நில்லடா!?

நான் தமிழன் என்றும், அதே சமயம் இந்தியன் என்றும் சொல்லி கொள்வதை பெருமையாகவே நினைக்கிறேன். ஆனால், இனி அதற்காக வெட்கப்பட வேண்டும் போலிருக்கிறது.

இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில், மத்திய அரசின் சூழ்நிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தியாவை சுற்றிய அனைத்து அண்டை நாடுகளும் நம்மிடம் கருத்து வேறுபாடு கொண்டிருக்க, யாரையும் பகைத்துக்கொள்ள முடியாத நிலைமை.ஒரு எதிரியை உருவாக்குவது பிரச்னை இல்லை. ஆனால், அந்த எதிரியும் நம் இன்னொரு எதிரியும் கூட்டு சேர்ந்தால், அவர்களின் பலம் அதிகரிக்கும். இதை உணர்ந்து தான், நடைமுறை வாழ்க்கையில் கூட, நாம் அவசரப்பட்டு யாரையும் பகைத்துக் கொள்வதில்லை. 

எனவே, இலங்கை விஷயத்தில், இந்தியா கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டி இருக்கிறது.ஆனால், ஒரு இந்திய பிரஜையை, இன்னொரு நாட்டு ராணுவம் சுட்டு கொன்றால், இங்கே இந்தியா அடக்கி வாசிக்க வேண்டிய அவசியம் இல்லையே. இது, இந்தியாவின் பலவீனத்தை அல்லவா காட்டுகிறது. 

இதுபோன்ற அத்துமீறல்களை, இந்தியா பொறுத்துக்கொள்ள வேண்டுமா?விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கை வேண்டாமா? இங்கே மத்திய அரசும், சொரணையற்ற அரசாக தெரிந்தாலும், அவர்களுக்கு, பல மாநில பிரச்னைகளில், இதுவும் ஒன்று. 

எனவே, தமிழக அரசு தான், தமிழர்களின் மரியாதையை காப்பாற்ற, மத்திய அரசை கடுமையாக எச்சரித்து, தேவையான, உறுதியான நடவடிக்கையை எடுக்க வைக்க வேண்டும்.


ஆனால், தி.மு.க., ஆட்சியின் இதுநாள் வரையிலான வரலாறை பார்த்தால், பதவியைத் தவிர, வேறு எதைப் பற்றியும் சிந்திக்காதவர்கள் இவர்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

தமிழகத்தின் முக்கிய கட்சிகளான திமுக அதிமுக இரண்டு பேருக்கும் இதில் அதிக பொறுப்பு இருக்கின்றது. 
மத்திய அரசு ஒரு வடநாட்டுகாரனுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஒரு தென்னிந்தியனுக்கு முக்கியமாக தமிழனுக்கு எப்போதுமே கொடுப்பதில்லை.


ஒருவன் தவறு செய்தால், அதற்கான தண்டனையை அவன் அனுபவித்தால் தான் திருந்துவான். எனவே, சுயநலத்துக்காக தமிழனின் மானத்தை காற்றில் பறக்கவிடும் இந்த அரசியல்வாதிகளை, மக்கள் தேர்தலில் தண்டிக்காத வரையில், அவர்களும் திருந்தப் போவதில்லை; நாமும் தலை நிமிர்ந்து நடக்க முடியாது.(நன்றி  சிவா -  தினமலர்)

இன்றைய  நிலையைப் பார்த்து மனவருத்தத்துடன் தலைப்பை வைத்தேன். மன்னிக்கவும் .
சி.பி.செந்தில் சார்  மற்றும் பிரபல பதிவர்கள்  இதைகுறித்து  உங்கள் பிளாகில் கண்டனங்களை தெரிவியுங்கள். உலகலவில் இப்பிரச்சனையின் தீவிரத்தை தெரியபடுத்துவோம்.


முக்கிய அறிவிப்பு
ட்விட்டரில் தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் #tnfisherman என்பதை ட்வீட்களில் பேஸ்ட் செய்துகொள்ளவும்.

பெட்டிசன் ஆன்லைனில உங்களை கையொப்பங்களைப் பதிவு செய்யுங்கள்:  http://www.petitiononline.com/TNfisher/

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்....

50 comments:

  1. மீனவர்களின் போரட்டம் வலுப்பெறட்டும்

    ReplyDelete
  2. ***மத்திய அரசு ஒரு வடநாட்டுகாரனுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஒரு தென்னிந்தியனுக்கு முக்கியமாக தமிழனுக்கு எப்போதுமே கொடுப்பதில்லை.***

    நடைமுறையில் இது கண்கூடு... மிகச்சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள்..! நன்றி! வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  3. உலகம் முழுவதும் பரவி க்கிடக்கிறநம்நம ழினத்திற்மு இல ங்கையில் மட்டும் என்ன பாவம் செய்தானோ?
    உலக நாடுகளோ ஒரு சிறு தீவில் ஒரு இனமே அழிகிறது? இன்னுமா யோசனை

    ReplyDelete
  4. தலைப்பு, இன்றைய நிலை மட்டும் அல்ல. என்றைய நிலையும் அது தான். அதை மாற்ற வேண்டியதே நம் கடமை, பொறுப்பு எல்லாம்.

    ReplyDelete
  5. தலை குனிந்து நில்லடா.....!!!

    ReplyDelete
  6. படிக்கும் போதே ரொம்ப வருத்தமா இருக்கு பாஸ்! தமிழர்கள் எங்க இருந்தாலும் கொல்றதுன்னு முடிவு கட்டிட்டாங்க போலிருக்கு சிங்கள அரசு!

    ReplyDelete
  7. ரூபாய் 1000க்கும், குவார்ட்டர் கட்டிங்குக்கும், கால் பிளேட் பிரியானிக்கும் சோடை போகிறவன் இந்த தமிழன் என்பது எல்லா கட்சிகளுக்கும் தெரியும். அப்புறம் எப்படி நம்மை மதிப்பான்? உங்கள் தலைப்பு தவறே இல்லை. இதுதான் நடக்க போகுது. ஓட்டு போடாதிங்கப்பா. 49 ஓ கேட்டு போடுங்கப்பா எல்லாம் உருப்புட்டுடும். நாம் திருந்தினாதான் இந்த நாடு திருந்தும். இல்லைனா அதுவரைக்கும் காலம் பூரா இப்படித்தான் புலம்பிகிட்டு இருக்கனும். எந்த க(ழ)லகமும், காங்கரசும், பி ஜே பி யும் செய்ய முடியாததை 49 ஓ பண்ணுதான்னு பார்க்கலாம். தேர்தல்னு வந்துட்டா இதுக்கு எந்த தமிழனும் ஒத்துக்க மாட்டான், ஏனா தன் ஜாதிக்கரான் ஜெயிக்கனுமே.

    உண்மை சுடும் என்ற பதிவுக்கு நான் எழுதிய பிண்ணூட்டம் இது. எல்லாவற்றுக்கும் பொருந்தும் போல.

    ReplyDelete
  8. 2 லட்சம் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டபோதும் ,
    நமக்கென்ன என்றே அமைதி காத்தோம் .
    ஈழத் தமிழர்களுக்குத் தான் ரெட்டை முகம் காட்டிவிட்டோம்.தாய்த் தமிழக மீனவர்களுக்காவது ,நிஜமான உணர்வைக் காட்டுவோம் #tnfisherman

    இவண்
    இணையத் தமிழன்
    http://inaya-tamilan.blogspot.com

    ReplyDelete
  9. நன்றி நண்பரே நம்மால் முடிந்தவரை பங்கெடுத்துகொண்டு உதவியாய் இருப்போம்...

    ReplyDelete
  10. நண்பரே நம்மால் முடிந்தவரை பங்கெடுத்துகொண்டு உதவியாய் இருப்போம்...

    ReplyDelete
  11. யோசிக்க வேண்டிய விஷயம்...நல்ல கருத்து..
    இதையும் படிச்சிட்டு கருத்து சொல்லு தலைவா...
    http://tamilpaatu.blogspot.com/2011/01/blog-post_29.html
    ஓட்டு போட்டாச்சி...

    ReplyDelete
  12. மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம்தான் நடத்த வேண்டும், வெட்கம் :-(

    ReplyDelete
  13. Speed Master சொன்னது…

    மீனவர்களின் போரட்டம் வலுப்பெறட்டும்
    //தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி...

    ReplyDelete
  14. தங்கம்பழனி கூறியது...

    ***மத்திய அரசு ஒரு வடநாட்டுகாரனுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஒரு தென்னிந்தியனுக்கு முக்கியமாக தமிழனுக்கு எப்போதுமே கொடுப்பதில்லை.***

    நடைமுறையில் இது கண்கூடு... மிகச்சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள்..! நன்றி! வாழ்த்துக்கள்..// thanks

    ReplyDelete
  15. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

    உலகம் முழுவதும் பரவி க்கிடக்கிறநம்நம ழினத்திற்மு இல ங்கையில் மட்டும் என்ன பாவம் செய்தானோ?
    உலக நாடுகளோ ஒரு சிறு தீவில் ஒரு இனமே அழிகிறது? இன்னுமா யோசனை//
    Thanks.

    ReplyDelete
  16. tamilan கூறியது...

    சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

    தமிழன் ஒரு இளிச்சவாயன். ‍ ஜடம்.//????

    ReplyDelete
  17. தமிழ் உதயம் கூறியது...

    தலைப்பு, இன்றைய நிலை மட்டும் அல்ல. என்றைய நிலையும் அது தான். அதை மாற்ற வேண்டியதே நம் கடமை, பொறுப்பு எல்லாம்.//
    Thanks for comments.

    ReplyDelete
  18. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    தலை குனிந்து நில்லடா.....!!!//
    Nanbenda..

    ReplyDelete
  19. மாத்தி யோசி கூறியது...

    படிக்கும் போதே ரொம்ப வருத்தமா இருக்கு பாஸ்! தமிழர்கள் எங்க இருந்தாலும் கொல்றதுன்னு முடிவு கட்டிட்டாங்க போலிருக்கு சிங்கள அரசு!// Thanks for comments..

    ReplyDelete
  20. கிணற்றுத் தவளை கூறியது...

    ரூபாய் 1000க்கும், குவார்ட்டர் கட்டிங்குக்கும், கால் பிளேட் பிரியானிக்கும் சோடை போகிறவன் இந்த தமிழன் என்பது எல்லா கட்சிகளுக்கும் தெரியும். அப்புறம் எப்படி நம்மை மதிப்பான்? உங்கள் தலைப்பு தவறே இல்லை. இதுதான் நடக்க போகுது. //
    Thanks for comments.
    .

    ReplyDelete
  21. Vijay @ இணையத் தமிழன் கூறியது...

    2 லட்சம் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டபோதும் ,
    நமக்கென்ன என்றே அமைதி காத்தோம் .
    ஈழத் தமிழர்களுக்குத் தான் ரெட்டை முகம் காட்டிவிட்டோம்.தாய்த் தமிழக மீனவர்களுக்காவது ,நிஜமான உணர்வைக் காட்டுவோம் #tnfisherman////
    தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி...

    ReplyDelete
  22. மாணவன் கூறியது...

    நன்றி நண்பரே நம்மால் முடிந்தவரை பங்கெடுத்துகொண்டு உதவியாய் இருப்போம்...// Thanks..

    ReplyDelete
  23. ராம்ஜி_யாஹூ கூறியது...

    nice// thanks.

    ReplyDelete
  24. ரேவா கூறியது...

    நண்பரே நம்மால் முடிந்தவரை பங்கெடுத்துகொண்டு உதவியாய் இருப்போம்...//
    thanks for visit and comments.

    ReplyDelete
  25. பாட்டு ரசிகன் கூறியது...

    யோசிக்க வேண்டிய விஷயம்...நல்ல கருத்து..
    இதையும் படிச்சிட்டு கருத்து சொல்லு தலைவா...// Thanks for comments.

    ReplyDelete
  26. இரவு வானம் கூறியது...

    மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம்தான் நடத்த வேண்டும், வெட்கம் :-(///

    தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி...

    ReplyDelete
  27. பின்னுட்டம்இட்டு உங்கள் கருத்தை பகிர்ந்த அத்தனை பேருக்கும் என் நன்றிகள்...

    ReplyDelete
  28. தங்கள் உணர்வுக்கு நன்றி. பதிவுலகில் தமிழர்களான நாங்கள் எம் தமிழ் சகோதரர்களின் விடியலுக்காக எங்களால் முடிந்ததை செய்ய மன்வரவேண்டும்.

    ReplyDelete
  29. உங்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து.. மதிப்பிழந்த நம் இனத்திற்கு எதையாவது செய்ய துணிவோம்...
    அற்புதமான பதிவு மதிப்பிற்குரிய பதிவரே..

    ReplyDelete
  30. அருமையான பதிவு..நன்றி...

    ReplyDelete
  31. hello.. helllooo... hallalloooooooo ............

    ReplyDelete
  32. உங்களைப்போன்ற தமிழர்கள் தமிழகத்தில்
    இருப்பது மகிழ்ச்சிதருகிறது .
    நன்றி நண்பரே .

    ReplyDelete
  33. நாம் தமிழர்கள் சாதி மதத்தை விடுத்து என்று தமிழன் என்று ஒரு குடைக்கீழ் ஒற்றுமையாக வருகின்றோமோ அன்று தான் எமக்கு விடிவு. அது வரை அழிவுகளை சகித்துக் கொள்ள வேண்டியது தான். முதலில் தாய் தமிழகத்தில் ஒரு சிறந்த தமிழ் உணர்வாளரை உங்கள் தலைவராக முதல்வராக தேர்ந்தெடுங்கள். தமிழருக்கு ஏற்படும் அவலங்கள் எண்ணிக்கையாவது குறையும். சுயநலம் பிடித்த அரசியல் வியாதிகளை வாழவைப்பதற்காக எம்மை நாமே அழித்துக கொண்டிருக்கின்றோம்.

    ReplyDelete
  34. தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி...

    ReplyDelete
  35. இலங்கை யுத்தத்தில் இராசயன ஆயுதங்கள் கொடுத்து ஊக்கபடுத்தியது இந்திய அரசு என்பது பலருக்கு தெரியாது

    ReplyDelete
  36. இலங்கை யுத்தத்தில் இராசயன ஆயுதங்கள் கொடுத்து ஊக்கபடுத்தியது இந்திய அரசு என்பது பலருக்கு தெரியாது

    ReplyDelete
  37. இலங்கை யுத்தத்தில் இராசயன ஆயுதங்கள் கொடுத்து ஊக்கபடுத்தியது இந்திய அரசு என்பது பலருக்கு தெரியாது

    ReplyDelete
  38. Jana சொன்னது…

    தங்கள் உணர்வுக்கு நன்றி. பதிவுலகில் தமிழர்களான நாங்கள் எம் தமிழ் சகோதரர்களின் விடியலுக்காக எங்களால் முடிந்ததை செய்ய மன்வரவேண்டும்.
    // Thanks.

    ReplyDelete
  39. Srini சொன்னது…

    உங்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து.. மதிப்பிழந்த நம் இனத்திற்கு எதையாவது செய்ய துணிவோம்...
    அற்புதமான பதிவு மதிப்பிற்குரிய பதிவரே..
    // Thanks for comments.

    ReplyDelete
  40. பெயரில்லா சொன்னது…

    hello.. helllooo... hallalloooooooo ............
    // Who r u?

    ReplyDelete
  41. யாழ். நிதர்சனன் சொன்னது…

    உங்களைப்போன்ற தமிழர்கள் தமிழகத்தில்
    இருப்பது மகிழ்ச்சிதருகிறது .
    நன்றி நண்பரே .
    // Thanks..

    ReplyDelete
  42. பெயரில்லா சொன்னது…

    இலங்கை யுத்தத்தில் இராசயன ஆயுதங்கள் கொடுத்து ஊக்கபடுத்தியது இந்திய அரசு என்பது பலருக்கு தெரியாது
    // Who are you?

    ReplyDelete
  43. தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி...

    ReplyDelete
  44. போரட்டம் வலுப்பெறட்டும்!!!

    ReplyDelete
  45. மீனவர்களின் போரட்டம் வலுப்பெறட்டும்

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"