Tamilus

The best Tamil Aggregator | Tamilus

1/26/2011

சலுகையா அல்லது சமாதியா?

ஆடைகளுக்குப் போட்டியாக தினம் ஒரு மாடலில் கைகளை அலங்கரிக்கும் அந்தஸ்தை செல்போன்கள் பெற்றுவிட்டன. மனிதர்கள் வசிக்கும் தொலைவைச் சுருக்கியதுடன், முகங்களைக் கூட பத்து இலக்க எண்களாக இவை மாற்றிவிட்டன என்பதே உண்மை.

 மனிதர்களின் அனைத்து அடிப்படைத் தேவைகளின் விலையும் ஏறுவரிசையில் இருக்கும் நிலையில், தொலைத்தொடர்பு சேவைக் கட்டணங்கள் மட்டுமே இறங்கு வரிசைக்கு இடம்பெயர்ந்துள்ளன.

 பொதுவாக செல்போன் சேவையைப் பயன்படுத்துவோர் தங்கள் நிறுவனங்களைச் சேர்ந்த பிற வாடிக்கையாளர்களுடன் குறைந்த கட்டணத்தில் பேசி மகிழ பல்வேறு விதமான பூஸ்டர்  கார்டுகள் மற்றும் சலுகைத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றை உபயோகப்படுத்தி தமிழகத்தின் எந்த மூலையில் இருப்பவருக்கும் 1 நிமிஷத்துக்கு 10 பைசா கட்டணத்தில்கூட பேச முடிகிறது. செல்போன் சேவையை அதிகம் பயன்படுத்துவோர் இந்தச் சலுகைத் திட்டங்களில் உடனடியாக இணைந்து கொள்கின்றனர்.  

சில சாமானியர்கள் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் மட்டுமே "பூஸ்டர்' கார்டுகள் மற்றும் சலுகைத் திட்டங்களின் தயவை நாட வேண்டிய சூழல் உள்ளது.  ஏனெனில், குடும்பத்தார் அனைவரும் ஒன்று சேரும் பண்டிகை காலத்தில், செல்போன் பேச்சுக்கு தற்போது பஞ்சமிருப்பதில்லை.  

 குடும்பத்தாரின் மகிழ்ச்சியைப் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தினாலும், அதே நேரத்தில் பொருளாதாரச் சிக்கனம் கருதியும் குறிப்பிட்ட பணம் செலுத்தி சலுகைத் திட்டங்களில் சேர்பவர்கள் பலர்.  

ஆனால், செல்போன் சேவை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் திட்டமிடுதலைத் தகர்க்கும் வகையில் பண்டிகைக்கு முந்தைய நாளில் சிறப்புக் குறுஞ்செய்தியை அனுப்புகின்றன.  அந்தக் குறுஞ்செய்தியில், வரும் இரண்டு நாள்களுக்கு மட்டும் நீங்கள் உபயோகப்படுத்திவரும் சலுகைக் கட்டணங்கள் நிறுத்தப்படுகிறது. மாறாக, தாங்கள் பயன்படுத்தும் சிம் கார்டின் அடிப்படைத் திட்டக் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை தெரிவிக்கிறார்கள்.  

இதனால் நிமிஷத்துக்கு 10 பைசா கட்டணத்தில் பேசியவர்கள் கூட, அந்த இரு நாள்களும் நிமிஷத்துக்கு ரூ. 1 வரை செலவழிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் "பூஸ்டர்' கார்டுகள் மற்றும் சலுகைத் திட்டங்கள் என்பவை உண்மையான சலுகையா? அல்லது வாடிக்கையாளர்களை வீழ்த்தும் மூளைச்சலவையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ( நன்றி தினமணி)

லட்சங்களில் புரளும் தொழிலதிபர்களுக்கும், கோடிகளில் திளைக்கும் செல்போன் சேவை நிறுவனங்களுக்கும் சலுகை காட்டும் தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள், ஏழைகள் மிகுந்த தமது வாடிக்கையாளர் வட்டத்தைப் புறக்கணிப்பது சரியல்ல.

 விழாக்கால "சலுகை ஏமாற்றம்' அளிக்கும் செயல்களில் மட்டும் முன்னணியில் இருக்காமல்,   இனிவரும் பண்டிகைக் காலங்களிலாவது சலுகைக் கட்டணத்தில் வாடிக்கையாளர்களைப் பேச அனுமதிக்க வேண்டும் என்பதே லட்சக்கணக்கான இல்லையில்லை கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு.   

இதற்கு நீங்களும் குரல்கொடுக்க கருத்துரையிடுங்கள்.

பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
 

56 comments:

  1. செல்போன்கள் மனிதர்கள் வசிக்கும் தொலைவைச் சுருக்கியதுடன், முகங்களைக் கூட பத்து இலக்க எண்களாக இவை மாற்றிவிட்டன என்பதே உண்மை.superb......

    ReplyDelete
  2. நல்லா மேட்டர் சொல்லி இருக்கீங்க பாஸ்! உரியவங்க கவனிப்பாங்க்களா? ஓட்டும் போட்டாச்சு, கமெண்டும் போட்டாச்சு! ஹப்பியா?

    ReplyDelete
  3. அருமையான பதிவு

    பகிர்வுக்கு நன்றி

    உங்களுக்கும் நண்பர்களுக்கும் இனிய குடியரசுதின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. போட்டாச்சு போட்டாச்சு எல்லாத்திலும் ஓட்டு போட்டாச்சு

    ReplyDelete
  5. அருமையான பதிவு.

    ReplyDelete
  6. // உண்மையான சலுகையா? அல்லது வாடிக்கையாளர்களை வீழ்த்தும் மூளைச்சலவையா?//

    காசப்பூ காசு...............

    ReplyDelete
  7. அருமையான பதிவு நண்பரே

    உண்மையில் தமிழகத்தில் மட்டும் அல்ல இலங்கையிலும் கூட இதே நிலைமை தான். இந்த கம்பெனிகளுக்கிடையில் போட்டி நிலவுகிற அதே சமயம் கட்டண குறைப்பு வசதி மட்டுமன்றி free sim cards ரோட் வழியாக் பகிரப்படுகின்றது. பண்டிகை காலங்களில் சலுகைகள் வழங்கப்பட்டாலும் அதையும் தாண்டி போட்டி தன்மைக்காக வேறு சில சலுகைகளும் வழங்குகின்றார்கள்

    நன்றி பகிர்வுக்கு

    ReplyDelete
  8. உண்மையில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு.
    நன்றி நண்பா வோட்டு போட்டேன்
    இதையும் பாருங்க
    http://tamilaaran.blogspot.com/2011/01/chrome.html
    பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும்

    ReplyDelete
  9. Nice thanks for sharing
    ootu pootaatchu

    ReplyDelete
  10. நல்ல பதிவு. சரி. இதற்கென்ன தீர்வு. அரசு நிறுவனமான BSNLகூட பண்டிகை காலங்களில் மெஸேஜ் அனுப்ப அதிக கட்டணமே வசூலிக்கிறது.

    ReplyDelete
  11. பண்டிகை என்றால் sms வாழ்துக்களே முதலிடம் அதற்கும் ஆப்பா?

    ReplyDelete
  12. அருமையான பதிவு

    ReplyDelete
  13. வேடந்தாங்கள் ஆசிரியரே!உங்கள் ஒவ்வொரு பதிவும் கடையில் விற்கும் பொருள்கள் அல்ல!பாதுகாக்க வேண்டிய தகவல் பெட்டகம் வாழ்த்துக்கள்.வாக்கினை பதிவு செய்கிறேன்.
    தீரன்சின்னமலை-புலனாய்வு செய்தி ஊடகப்பதிவிற்காக-டி.கே.தீரன்சாமி.
    http://theeranchinnamalai.blogspot.com

    ReplyDelete
  14. "மனிதர்கள் வசிக்கும் தொலைவைச் சுருக்கியதுடன், முகங்களைக் கூட பத்து இலக்க எண்களாக இவை மாற்றிவிட்டன என்பதே உண்ம"

    அங்கு கட்டணகுறைவு பறவாயில்லை எமது நாட்டில் (கனடா)நாட்டற்குள் வெளிச்செல்லும் அழைப்பு உள்வரும் அழைப்பு முழுவதும் இலவசம்...

    ReplyDelete
  15. அருமையான பதிவு.பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  16. அது சலுகை திட்டம் அல்ல...கொள்ளை அடிக்கும் திட்டம்....

    ReplyDelete
  17. மனிதர்கள் வசிக்கும் தொலைவைச் சுருக்கியதுடன், முகங்களைக் கூட பத்து இலக்க எண்களாக இவை மாற்றிவிட்டன என்பதே உண்மை.


    ....."முகங்கள் - முகமூடிகள்" மாறுவது போல, எண்களும் மாறும் என்பதையும் சொல்லாமல் சொல்லிட்டீங்களே! சூப்பர்!

    ReplyDelete
  18. நல்ல பதிவு. ஆனால் வெளிநாடுகளை பார்க்கும் போது நம்மவர்கள் பரவாயில்லை.

    அத்துடன் தொலைபேசி பயன்படுத்தும் போது நாம் அதனை பயன்படுத்தாவிட்டாலும் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டி உள்ளது. இதை எல்லாம் பார்க்கும் போது இந்த கட்டுப்பாடுகள் தவறில்லை.

    ஆனால் அவர்கள் பணம் எடுப்பது குறுஞ்செய்திகளுக்கு மட்டும்தானே.

    ReplyDelete
  19. நல்ல ஆதங்கம்தான்..

    ReplyDelete
  20. தெளிவான சிந்தனை... அருமை நண்பரே...

    ReplyDelete
  21. padhivu suuppar. பதிவு சூப்பர்.. யூஸ்ஃபுல்

    ReplyDelete
  22. thamizmanam ஓட்டுப்பட்டையைகாணோம்.மத்த 3இலும் ஓட்டு போட்டாச்சு. சரி ஆனதும் 9842713441 க்கு எஸ் எம் எஸ் பண்ணுங்க அதையும் போட்டுடறேன்

    ReplyDelete
  23. //மனிதர்கள் வசிக்கும் தொலைவைச் சுருக்கியதுடன், முகங்களைக் கூட பத்து இலக்க எண்களாக இவை மாற்றிவிட்டன என்பதே உண்மை.// நிதர்சனமான உண்மை.

    நன்றி நண்பரே.

    ReplyDelete
  24. பின்னுட்டம இட்டு உங்கள் கருத்தை பகிர்ந்த அத்தனை பேருக்கும் என் நன்றிகள்...

    ReplyDelete
  25. நிச்சயமா இனிவரும் காலங்களில் மாறினால் நல்லா இருக்கும் ..

    பதிவு நச் நண்பரே

    ReplyDelete
  26. ரேவா கூறியது...

    செல்போன்கள் மனிதர்கள் வசிக்கும் தொலைவைச் சுருக்கியதுடன், முகங்களைக் கூட பத்து இலக்க எண்களாக இவை மாற்றிவிட்டன என்பதே உண்மை.superb......//
    Thanks

    ReplyDelete
  27. மாத்தி யோசி கூறியது...

    நல்லா மேட்டர் சொல்லி இருக்கீங்க பாஸ்! உரியவங்க கவனிப்பாங்க்களா? ஓட்டும் போட்டாச்சு, கமெண்டும் போட்டாச்சு! ஹப்பியா?// Happy

    ReplyDelete
  28. மாணவன் கூறியது...

    அருமையான பதிவு

    பகிர்வுக்கு நன்றி

    உங்களுக்கும் நண்பர்களுக்கும் இனிய குடியரசுதின நல்வாழ்த்துக்கள்///
    நன்றி

    ReplyDelete
  29. ரஹீம் கஸாலி கூறியது...

    போட்டாச்சு போட்டாச்சு எல்லாத்திலும் ஓட்டு போட்டாச்சு// thanks..

    ReplyDelete
  30. ஆயிஷா கூறியது...

    அருமையான பதிவு.// Thanks

    ReplyDelete
  31. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    // உண்மையான சலுகையா? அல்லது வாடிக்கையாளர்களை வீழ்த்தும் மூளைச்சலவையா?//

    காசப்பூ காசு...............// true

    ReplyDelete
  32. Harini Nathan கூறியது...

    அருமையான பதிவு நண்பரே

    உண்மையில் தமிழகத்தில் மட்டும் அல்ல இலங்கையிலும் கூட இதே நிலைமை தான். இந்த கம்பெனிகளுக்கிடையில் போட்டி நிலவுகிற அதே சமயம் கட்டண குறைப்பு வசதி மட்டுமன்றி free sim cards ரோட் வழியாக் பகிரப்படுகின்றது. பண்டிகை காலங்களில் சலுகைகள் வழங்கப்பட்டாலும் அதையும் தாண்டி போட்டி தன்மைக்காக வேறு சில சலுகைகளும் வழங்குகின்றார்கள்

    நன்றி பகிர்வுக்கு//

    நன்றி நன்றி நன்றி

    ReplyDelete
  33. நிதர்சனன் கூறியது...

    உண்மையில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு.
    நன்றி நண்பா வோட்டு போட்டேன்
    இதையும் பாருங்க
    http://tamilaaran.blogspot.com/2011/01/chrome.html
    பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும்/// Thanks

    ReplyDelete
  34. Speed Master கூறியது...

    Nice thanks for sharing
    ootu pootaatchu// Thanks

    ReplyDelete
  35. தமிழ் உதயம் கூறியது...

    நல்ல பதிவு. சரி. இதற்கென்ன தீர்வு. அரசு நிறுவனமான BSNLகூட பண்டிகை காலங்களில் மெஸேஜ் அனுப்ப அதிக கட்டணமே வசூலிக்கிறது.// Ok

    ReplyDelete
  36. FARHAN கூறியது...

    பண்டிகை என்றால் sms வாழ்துக்களே முதலிடம் அதற்கும் ஆப்பா?//
    yes

    ReplyDelete
  37. ஆமினா கூறியது...

    அருமையான பதிவு// Thanks..

    ReplyDelete
  38. டி.கே.தீரன்சாமி. கூறியது...

    வேடந்தாங்கள் ஆசிரியரே!உங்கள் ஒவ்வொரு பதிவும் கடையில் விற்கும் பொருள்கள் அல்ல!பாதுகாக்க வேண்டிய தகவல் பெட்டகம் வாழ்த்துக்கள்.வாக்கினை பதிவு செய்கிறேன்.
    தீரன்சின்னமலை-புலனாய்வு செய்தி ஊடகப்பதிவிற்காக-டி.கே.தீரன்சாமி.// THANKS

    ReplyDelete
  39. நிச்சயமா மூளைச்சலவைதான்..

    ReplyDelete
  40. பதிவின் கருத்துக்கள் அருமை , ஆனால் உரியவர்கள் சிந்திப்பார்களா என்று தெரியவில்லை

    ReplyDelete
  41. உங்கள் அன்புக்கு ஆயிரம் நன்றிகள்.

    ReplyDelete
  42. அருமையான பதிவு. கோபப்படுவதைத் தவிர நம்மால் என்ன செய்ய இயலும்?

    --------------------------
    நா.மணிவண்ணன் சொன்னது…

    பதிவின் கருத்துக்கள் அருமை , ஆனால் உரியவர்கள் சிந்திப்பார்களா என்று தெரியவில்லை
    -----------------------------

    அதிலென்ன சந்தேகம்? கண்டிப்பாக சிந்திக்க மாட்டார்கள்!

    ReplyDelete
  43. அது ஒன்னும் இல்லை நண்பரே எனக்கு எழுதுவதற்கு ஒய்வு கிடைப்பதே சில நேரம் தான். தற்பொழுது ஒரு அரசு வேலை தேர்வு இருப்பதால் ஒரு வாரம் கிடைத்திருக்கிறது. அதற்குள் எழுத வேண்டும் என்று எண்ணுவதால் தான். ஹி ஹி ஹி . . .

    ReplyDelete
  44. எனக்கு ஒரு சந்தேகம் நேரடியாக comment box இல் தமிழில் டைப் செய்ய முடியுமா.

    ReplyDelete
  45. தோழி பிரஷா கூறியது...

    "மனிதர்கள் வசிக்கும் தொலைவைச் சுருக்கியதுடன், முகங்களைக் கூட பத்து இலக்க எண்களாக இவை மாற்றிவிட்டன என்பதே உண்ம"

    அங்கு கட்டணகுறைவு பறவாயில்லை எமது நாட்டில் (கனடா)நாட்டற்குள் வெளிச்செல்லும் அழைப்பு உள்வரும் அழைப்பு முழுவதும் இலவசம்...// Thanks..

    ReplyDelete
  46. Lakshmi கூறியது...

    அருமையான பதிவு.பகிர்ந்தமைக்கு நன்றி.///
    நன்றி,நன்றி

    ReplyDelete
  47. NKS.ஹாஜா மைதீன் கூறியது...

    அது சலுகை திட்டம் அல்ல...கொள்ளை அடிக்கும் திட்டம்....// Thanks..

    ReplyDelete
  48. Chitra கூறியது...

    மனிதர்கள் வசிக்கும் தொலைவைச் சுருக்கியதுடன், முகங்களைக் கூட பத்து இலக்க எண்களாக இவை மாற்றிவிட்டன என்பதே உண்மை.// Thanks for comments.

    ReplyDelete
  49. பலே பிரபு கூறியது...

    நல்ல பதிவு. ஆனால் வெளிநாடுகளை பார்க்கும் போது நம்மவர்கள் பரவாயில்லை.

    அத்துடன் தொலைபேசி பயன்படுத்தும் போது நாம் அதனை பயன்படுத்தாவிட்டாலும் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டி உள்ளது. இதை எல்லாம் பார்க்கும் போது இந்த கட்டுப்பாடுகள் தவறில்லை.

    ஆனால் அவர்கள் பணம் எடுப்பது குறுஞ்செய்திகளுக்கு மட்டும்தானே.//// thanks..

    ReplyDelete
  50. T.V.ராதாகிருஷ்ணன் கூறியது...

    பகிர்வுக்கு நன்றி//// Thanks..

    ReplyDelete
  51. Riyas கூறியது...

    நல்ல ஆதங்கம்தான்..// Thanks for coming..

    ReplyDelete
  52. Philosophy Prabhakaran கூறியது...

    தெளிவான சிந்தனை... அருமை நண்பரே...// Thanks..

    ReplyDelete
  53. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    padhivu suuppar. பதிவு சூப்பர்.. யூஸ்ஃபுல்//// Thanks for comments..

    ReplyDelete
  54. வெங்கட் நாகராஜ் கூறியது...

    //மனிதர்கள் வசிக்கும் தொலைவைச் சுருக்கியதுடன், முகங்களைக் கூட பத்து இலக்க எண்களாக இவை மாற்றிவிட்டன என்பதே உண்மை.// நிதர்சனமான உண்மை.

    நன்றி நண்பரே.///
    நன்றி ,நன்றி ,நன்றி .

    ReplyDelete
  55. Good Post... Everyone must think about it.

    By http://hari11888.blogspot.com

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"