Tamilus

The best Tamil Aggregator | Tamilus

1/02/2011

மாணவர்களை பழிவாங்குகிறதா மத்திய அரசு?

த்திய இடைநிலைக் கல்வி வாரியம், "சி.பி.எஸ்.இ., - சி.சி.இ.,' என்ற, புதிய கல்வி முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இப்புதிய கல்விமுறை மூலம், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, உள்ளீட்டு மதிப்பெண்கள் 60, பள்ளி இறுதித் தேர்வின் மூலம் 40 மதிப்பெண்களும் வழங்க, வகை செய்யப்பட்டுள்ளது. 

இந்த 60 உள்ளீட்டு மதிப்பெண்களை, திறன் பதிவுகள் மூலமே ஆசிரியர்கள் வழங்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, மாணவர்கள் தயாரிக்கும் புராஜக்ட், அசைன்மன்ட் மற்றும் இதர வகுப்பறை செயல்பாடுகளை பரிசீலித்தே, இந்த திறன் பதிவுகளை செய்ய வேண்டும்.இதுபோன்ற புதிய வகுப்பறை செயல்பாடுகள் காரணமாக, ஆசிரியர்களின் கற்பிக்கும் பணி வெகுவாக குறைந்து, திறன் பதிவுகளை செய்வதிலேயே அவர்கள் முழு கவனமும் உள்ளது. 

இப்புதிய முறையில், தேர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. இதனால், பெற்றோருக்கு, தங்கள் பிள்ளைகளின் தரத்தை அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.புதிய முறையின் மூலம் கற்பிக்கும் பணி மிகவும் குறைந்துவிட்டதால், மாணவர்களின் கற்கும் திறனும், அறிவு வளர்ச்சியும், வெகுவாக பாதிப்படையும் என்ற நிலை உள்ளதால், பெற்றோரின் அச்சம் மேலும் அதிகமாகியுள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக, 60 உள்ளீட்டு மதிப்பெண்களை பள்ளிகளே வழங்கலாம் என்ற நிலை உள்ளதால், பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களையும், பெற்றோரையும் மிரட்டும் போக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இதற்கான தீர்வை பின்னூட்டமிடவும்.



பதிவு பிடித்திருந்தால்  அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.

6 comments:

  1. உள்ளீட மதிப்பெண் முறை என்பது மதிப்பெண்ணை பரவலாக்க மேற்க்கொள்ளப்பட்ட முறையாகும்.
    மாணவர்களின் செயற்பாடுகளை ஆசிரியர்களால் கணிக்க முடியும் என்பதால் இந்த முறை ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது.
    தற்போதைய தேர்வுகள் மாணவனை உளவியல் ரீதியாக அதிக நெருக்கடிக்கு உள்ளாக்குவதால் இதனை செய்துள்ளனர். ஆனால் நீங்கள் சொல்வது போல் ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகமும் இதனை தவறான முறையில் கையில் எடுத்துக்கொண்டால், அது மாணவர்களை விடுவிப்பதற்கு பதிலாக அதிக நெருக்கடிக்கு உள்ளாக்கும் என்பது உண்மைதான்.
    மனச்சாட்சியுடன் ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகமும் இதில் நடந்துக்கொள்ளுவது இன்றியமையாதது.

    ReplyDelete
  2. கல்வி பற்றிய இந்த விசயத்தை பதிவுக்கு எடுத்துக்கொண்டதற்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. sakthistudycentre. பதிவர்களுக்கு ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. ஹேப்பி நியூ இயர்

    ReplyDelete
  5. // பழிவாங்கள் //

    பழிவாங்கல்...

    மற்றபடி இதற்கு தீர்வு சொல்லுமளவிற்கு நமக்கு அறிவு போதாது... கெளம்புறேன்...

    ReplyDelete
  6. இதுக்கு என்ன சொல்வது என்றே புரியலியே.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"