Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/01/2010

இது  என்னுடைய 50 வது பதிவு.

மிக குறைந்த பதிவிலேயே 800 க்கு மேல் ஹிட்ஸுகளை வாரி வழங்கி  கொடுத்த சக பதிவர்கள், வாசக நண்பர்களுக்கு நன்றி..நன்றி.. நன்றி..

நான் இந்த வாரம் சபரிமலை யாத்திரை செல்வதால் பதிவிடுவதில் சிரமமே...

இன்று ....

டிசம்பர் 1: மத்திய ஆபிரிக்கக் குடியரசு - விடுதலை நாள் (1958), உலக எய்ட்ஸ் நாள் (எதிர்ப்பை குறிக்கும் சிகப்பு நாடா சின்னம் படத்தில்)
  • 1958 - சிக்காகோவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 92 மாணவர்கள் உட்பட 95 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1959 - பனிப்போர்: அண்டார்டிக்கா கண்டத்தில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவும் அக்கண்டத்தை அறிவியல் ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.
  •  1960 - கொங்கோ அதிபர் பத்திரிசு லுமும்பா இராணுவத் தளபதி மொபுட்டுவினால் கைது செய்யப்பட்டார்.
உலக எய்ட்ஸ் நாள் 

உலகளவிலான எய்ட்ஸ் நோய் எதிர்ப்பை குறிக்கும் சிகப்பு நாடா சின்னம்.

உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988 இல் நடைப்பெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் 

இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.
1981-ஆம் ஆண்டிலிருந்து 2007-ஆம் ஆண்டு வரை எய்ட்ஸ் நோயால் இறந்தவரின் எண்ணிக்கை 250 லகரங்களுக்கு மேல். மற்றும் 2007-ஆம் ஆண்டு வரை 332 லகரம் மக்கள் இந்நோயுடன் வாழ்ந்து வருகின்றனர்.இதனால் இந்நோய் வரலாற்றிலேயே மிக கொடூரமான தொற்றுநோயாக கருதபடுகிறது. சமீபத்திய சிகிச்சை முறைகளின் முன்னேற்றம் மற்றும் கண்காணிப்பின் கீழ் இருந்தும், எய்ட்ஸ் நோயால் உலகெங்கிலும் 2007-ஆம் ஆண்டில் 20 லகரம் உயிரிழப்பு ஏற்பட்டது ,இதில் 270,000 குழந்தைகள்.

AidsRusStamp1993.jpg
சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பில் எயட்சிர்க்கான உலகளாவிய நிகழ்ச்சியின் பொது தகவல் அதிகாரிகளான ஜேம்ஸ் பன்ஸ் மற்றும் தாமஸ் நெட்டேர் எனும் இருவரால் 1987-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்டதே உலக எய்ட்ஸ் தினம் . தங்கள் யோசனையை எயட்சிர்கான உலகளாவிய நிகழ்ச்சியின் இயக்குனர் முனைவர் ஜோனதன் மன்னிடம் கொண்டு சென்றனர் இருவரும். முனைவர்.மன்னுக்கு இது பிடித்து போகவே,அவர் இதை அங்கீகரித்து , 1988-ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் நாளை உலக எய்ட்ஸ் தினமாக கடைபிடிக்க பரிந்துரை செய்தார்.

டிசம்பர் ஒன்றாம் நாளை அத்தினமாக கடைபிடிக்க பன் தான் யோசனை வழங்கினர்,ஏனெனில் அப்பொழுது தான் மேற்க்கத்திய செய்தி நிறுவனங்களின் கவனம் அவ்வருடம் (1988) நடைபெறும் தேர்தலை முழுமையாக ஒலிபரப்பு செய்து ஓய்ந்திருக்கும்.ஆதலால்,புது செய்திக்காக காத்திருக்கும் அமெரிக்க செய்தி நிறுவனங்களை கொண்டு இந்நாளை உலகம் முழுதும் கடைபிடிக்க அணுகவது செரியானது என்று தீர்மானித்தார்கள்.மேலும், டிசம்பர் ஒன்று என்பது தேர்தல் முடிந்து சில நாட்களுக்கு பின்னும், கிறிஸ்த்துமஸ் விடுமுறை தொடங்க சில நாட்களுக்கு முன்னும் வருவதால், அதுவே உலக நாள்காட்டியில் சரியான நாளாக அமையும் என்று பன்ஸ் மற்றும் நெட்டேர் உணர்ந்தார்கள்.

எச். ஐ. வி/எய்ட்ஸ்க்காக கூட்டு ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சி 1996-ஆம் ஆண்டு செயல்பாட்டிற்கு வந்தது, மேலும் இதுவே உலக எய்ட்ஸ் தினத்திற்கான திட்டம் மற்றும் ஊக்குவிப்பை செய்தது. ஒரே நாளில் செய்வதற்கு பதிலாக1997-ஆம் ஆண்டு இந்நிகழ்ச்சி உலக எய்ட்ஸ் பிரச்சாரத்தை உருவாக்கி,அதன் மூலமாக வருடம் முழுவதும் செய்திப்பரிமாற்றம்,தடுப்பு மற்றும் கல்வி வழங்கின.
முதல் இரண்டு வருடங்களில்,எய்ட்ஸ் தினத்திற்கான கருப்பொருள் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரையே சுற்றி இருந்தது. எய்ட்சால் அவதியூருபவர்கள் மற்றும் ஹெட்ச்.ஐ.வியால் பாதிக்கப்படுபவர்கள் எல்லா வயதினருமே என்பதனால் இந்த கருப்பொருள்கள் பின்பு கடினமாக எதிர்க்கப்பட்டன.

2004-ஆம் ஆண்டு உலக எய்ட்ஸ் பிரச்சாரம் ஒரு சுதந்திர சங்கமாக மாறியது.
ஒவ்வொரு வருடமும், போப்பரசர்கள் இரண்டாம் ஜான் பால் மற்றும் பதினாறாம் பெனெடிக்ட் உலக எய்ட்ஸ் தினத்தன்று நோயாளிகள் மற்றும் மருத்துவர்களுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிடுவார்கள்.

1988-2004 வரையான எய்ட்ஸ் நாள் யுஎன்எய்ட்ஸ் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. 2005 முதல் இப்பொறுப்பு "உலக எய்ட்ஸ் பிரச்சாரம்" (உலக எய்ட்ஸ் பிரச்சாரம்) என்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உலக எய்ட்ஸ் நாள் கருப்பொருள் 1988 - 2010
1988    தொடர்பாடல்
1989    இளைஞர்
1990    எய்ட்சும் பெண்களும்
1991    சவாலை பகிர்ந்து கொள்ளல்
1992     சமூகத்தின் ஈடுபாடு
1993    செயலாற்றுதல்
1994    எய்ட்சும் குடும்பமும்
1995    உரிமைகளையும் பொறுப்புகளையும் பகிர்ந்து       கொள்ளல்
1996    ஒரு உலகம் ஒரு நம்பிக்கை
1997    எய்ட்சுடன் வாழும் குழந்தைகள்
1998     மாற்றத்துக்கான சக்தி: இளம் வயதினருடன் உலக எய்ட்ஸ் பிரச்சாரம்.
1999 செவிகொடு, கற்றுக்கொள், வாழ்: குழந்தைகள் மற்றும் இளம் வயதினருடன் உலக எய்ட்ஸ் பிரச்சாரம்.
2000 எய்ட்ஸ்: மாற்றம் செய்யும் மனிதர்
2001 நான் கவனிக்கிறேன்.நீங்கள்?
2002 வடு மற்றும் பாகுப்பாடு
2003 வடு மற்றும் பாகுப்பாடு
2004 பெண்கள், எச்.ஐ.வி., எய்ட்ஸ்
2005 எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று
2006 எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று- Accountability
2007      எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று
2008      எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று
2009     எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று
2010     எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று

 



0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"