Tamilus

The best Tamil Aggregator | Tamilus

11/27/2010

இன்று இதை தெரிந்து கொள்‌வோம்

உவமைத் தொகை 

உவமைத் தொகை என்பது, இரு சொற்களைக் கொண்ட ஒரு தொகைச்சொல். அதில் முதற்சொல் உவமைச் சொல்லாக இருக்கும். எடுத்துக் காட்டாக "பானைவாய்" என்பது "பானை", "வாய்" என்னும் இரு சொற்களைக் கொண்ட ஒரு தொகைச்சொல். பானைபோன்ற வாய் என்னும் பொருள் தருவது. இங்கே "பானை" "வாய்க்கு" உவமையாகக் கூறப்பட்டுள்ளது. இதனால், இது ஒரு உவமைத்தொகை ஆகும்.

எடுத்துக்காட்டுகள்

  • "மதிமுகம்"
  • "மலரடி"
  • "துடியிடை"
  • "கமலக்கண்"
  • "கனிவாய்"
  • "தேன்மொழி"
  • "மான்விழி"
  • "வாள்மீசை"
  இன்று....... 


நவம்பர் 27: தமிழ் ஈழம் - மாவீரர் நாள்
  • 1895 - பாரிசில் அல்பிரட் நோபல்  நோபல் பரிசுக்கான திட்டத்தை தெரிவித்து தனது சொத்துக்களை அப்பரிசுக்கான மூலதனமாக அறிவித்தார்.
  • 1964 - ஜவகர்லால் நேரு அணுவாயுதச் சோதனைகளை நிறுத்தும்படி ஐக்கிய அமெரிக்காவையும் ரஷ்யாவையும் கேட்டுக் கொண்டார்.
  • 2006 - கனடாவில் பிரெஞ்சு மொழி பேசும் மக்களை பெரும்பான்மையாக கொண்ட கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தனியான `தேச இனம்' என்ற அங்கீகாரத்தை கனடிய நாடாளுமன்றம் வழங்கியது.

 

0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"