Tamilus

The best Tamil Aggregator | Tamilus

11/22/2010

உங்களுக்குத் தெரியுமா ?

உங்களுக்குத் தெரியுமா ?


நம் கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கும்போது, திரை கருப்பாகக் காட்சி அளிக்கிறது. ஏதோதோ ஓடுகிறது; பல பைல்களின் பெயர்கள், எண்கள் காட்சி அளிக்கின்றன. இவற்றை எல்லாம் நாம் பார்ப்பதில்லை. எனக்கு என் டெஸ்க்டாப் கிடைத்தால் போதும் என்று இருந்து விடுகிறோம்.
இந்த கருப்பு திரையில் காட்டப்படும் விஷயங்கள், ஒரு கம்ப்யூட்டர்  தன் இயக்கத்தினைத் தொடங்கும்போது, தன்னிடம் உள்ள மற்றும் தன்னுடன் இணைக்கப்பட்டுள்ள  அனைத்து சாதனங்களும், சரியாக உள்ளனவா என்று சோதனை செய்து பார்த்துக் கொள்கிறது. 

இந்த சோதனையை, மதர்போர்டில் இணைக்கப்பட்டுள்ள சிப் ஒன்றில் பதியப்பட்டுள்ள புரோகிராம் ஒன்று மேற்கொள்கிறது. இதை BIOS – Basic Input Output System   என்று அழைக்கின்றனர். கம்ப்யூட்டரின் மூளையாக இயங்கும், சிபியு, டிஸ்க் ட்ரைவ், சிஸ்டம் கடிகாரம், கீ போர்டு, மவுஸ், சிஸ்டத்தில் உள்ள விசிறிகள் போன்ற அனைத்தும்  சோதனைக்குள்ளாகின்றன. இந்த சோதனையை POST (the poweron self tests)  என்று ஆங்கிலத்தில் கூறுகின்றனர்.
கம்ப்யூட்டரைத் தொடங்கும்போது, பயாஸ் புரோகிராம் தொடங்கி வைத்த சோதனைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு, அவை அனைத்தும் சரியாக உள்ளன என்று முடிவு தெரிந்த பின், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தேடுகிறது. உங்கள் கம்ப்யூட்டரில் செட் செய்தபடி அது பிளாப்பி ட்ரைவ், அதன்பின் ஹார்ட் ட்ரைவ் அல்லது சிடி ட்ரைவில் இதனைத் தேடி இயக்க வேண்டும்.

வெகுதூரம் காரில் போக வேண்டும் என்றால், நீங்கள் ஒரு கார் மெக்கானிக்கிடம் சென்று, காரை நன்றாகச் சோதனை செய்து கொடு என்று கேட்பது போலத்தான் இது. கார் இங்கு கம்ப்யூட்டர். அதன் BIOS  தான் மெக்கானிக். அவர் நடத்தும் சோதனைதான் POST.
இனி அடுத்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.  பயாஸ், முதலில் பிளாப்பி ட்ரைவில் சென்று ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ளதா என்று தேடும். அங்கு இல்லை என்றால், ஹார்ட் டிஸ்க்கில் சி ட்ரைவ் செல்லும். அங்கும் கிடைக்கவில்லை என்றால், சிடி ட்ரைவில் தேடும்.  கோவை நண்பரின் கம்ப்யூட்டரில் பயாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தேடும் முதல் இடம் சிடி ட்ரைவாக இருக்க வேண்டும். அவ்வாறு அது செட் செய்யப் படவில்லை. இதனை எப்படி செட் செய்வது என்று பார்க்கலாம்?

 
கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்கிய வுடன், இதுவரை நீங்கள் சரியாகக் கவனிக்காத, அந்த கருப்பு திரையை இப்போது நன்கு பார்க்கவும். முதல் திரையிலேயே Enter Setup என்று கிடைக்கும். அங்கு எந்த கீயை அழுத்தினால் செட் அப் கிடைக்கும் எனத் தரப்பட்டிருக்கும். சில கம்ப்யூட்டர்களில் இது டெலீட் கீ; சிலவற்றில் எப்1 கீ யாக இது தரப்பட்டிருக்கும்.
எந்த கீ தரப்பட்டுள்ளதோ, அதனை அழுத்தவும். இதனைக் கவனித்து அழுத்த முடியவில்லை என்றால், மீண்டும் கம்ப்யூட்டரை பூட் செய்து, மிகக் கவனமாகப் பார்த்து, உடனே குறிப்பிட்ட கீயினை அழுத்தவும். அழுத்தியவுடன் நீல வண்ணத்தில் ஒரு திரை தரப்பட்டு, அதில் பல செட்டிங்ஸ் அமைக்க பல விருப்பங்கள் தரப்பட்டிருக்கும். மற்றவற்றை புறக்கணித்து, ADVANCED BIOS FEATURES என்ற இடத்திற்குச் சென்று தேர்ந்தெடுக்கவும். இப்போது நீங்கள் Boot Sequence  என்ற திரைக்கு செல்வீர்கள். கீ போர்டு அம்புக் குறி கீகளைப் பயன்படுத்தி, First Boot Device என்று இருப்பதில் CDROM  எனவும், Second Boot Device  என்று இருப்பதில் Hard Disk எனவும் தேர்ந்தெடுத்து அமைக்கவும். மூன்றாவதாக இருப்பது குறித்து கவலைப்பட வேண்டாம். அது பிளாப்பி ட்ரைவ் சம்பந்தப்பட்டது.  பிளாப்பி ட்ரைவ் இல்லாத கம்ப்யூட்டர் என்பதனால்  அதனை Disabled  என்று அமைத்துவிடவும்.
அடுத்து நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்களை என்ன செய்ய வேண்டும் என்று அமைக்கக் கீழாக, ஒரு பிரிவில் Save, Exit  என  இருக்கும். திரையின் கீழாக என்று இருப்பதில், என்டர் தட்டவும்.
இப்போது ஒரு பாக்ஸ் கிடைக்கும். இது சிகப்பு வண்ணத்தில் இருக்கும். இதனைக் கண்டு பயப்பட வேண்டாம்.  இதில் Save to CMOS  and EXIT (Y or N)  என்று இருக்கும். இங்கு  Y   அழுத்தி என்டர் தட்டவும். என்டர் தட்டியவுடன், உங்கள் கம்ப்யூட்டர் மீண்டும் இயங்கத் தொடங்கும். இப்போது உங்கள் சிடி ட்ரைவில், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் சிடி இருந்தால், அதில் உள்ள சிஸ்டம் பைல்களை இயக்கப்படும். இனி எளிதாக, விண்டோஸ் சிஸ்டத்தினை ரீ இன்ஸ்டால் செய்திடலாம்.

0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"